BMW 3 சீரிஸின் 50-வது ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில், புதிய லிமிடெட் எடிஷன் மாடல்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
உலகப் புகழ்பெற்ற 3 சீரிஸின் 50-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், BMW இந்தியா, BMW 330Li M ஸ்போர்ட் மற்றும் BMW M340i ஆகியவற்றின் லிமிடெட் ரன் '50 ஜாஹ்ரே' பதிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள BMW குரூப் ஆலையில் இரண்டு மாடல்களும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன. இவற்றின் உற்பத்தி, ஒவ்வொன்றும் 50 யூனிட்களாக மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது. BMW 330Li M ஸ்போர்ட் 50 ஜாஹ்ரே பதிப்பின் விலை ரூ.64 லட்சம், BMW M340i 50 ஜாஹ்ரே பதிப்பின் விலை ரூ.76.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). BMW ஆன்லைன் ஷாப் வழியாக இவை விற்பனைக்கு வரும்.
விலை விவரம் இதுதான் மக்களே.!
வழக்கமான மாடல்களுடன் ஒப்பிடும்போது, இரண்டு சிறப்புப் பதிப்புகளும் முறையே ரூ.1.40 லட்சம் மற்றும் ரூ.1 லட்சம் அதிகம். 330Li M ஸ்போர்ட் 50 ஜாஹ்ரே பதிப்பு, M கார்பன் பிளாக், ஸ்கைஸ்கிராப்பர் கிரே, மினரல் ஒயிட் என மூன்று மெட்டாலிக் வண்ணங்களில் கிடைக்கிறது. சிக்னேச்சர் முன்புற கிரில்லில் உள்ள பளபளப்பான கருப்பு நிறம், ஜன்னல் சட்டங்கள், டெயில் பைப்புகள், பின்புற டிஃப்பியூசர் ஆகியவை வழக்கமான மாடலில் இருந்து வேறுபடுகின்றன. கூடுதலாக, B-பில்லரில் '1/50' பேட்ஜிங் உள்ளது.
கூடுதல் வசதிகள் இதுதான்
இந்த சிறப்புப் பதிப்பில் கார்பன் ஃபைபர் உட்புறம், வெர்னாஸ்கா காக்னாக் லெதர் அப்ஹோல்ஸ்டரி, கருப்பு நிற பூச்சு, 3D ஆக்மென்டட் நேவிகேஷன், HUD (ஹெட்-அப் டிஸ்ப்ளே) ஆகியவை அடங்கும். வழக்கமான மாடலில் உள்ள அதே 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின்தான் 330Li M ஸ்போர்ட் 50 ஜாஹ்ரே பதிப்புக்கும் இயக்கம் அளிக்கிறது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 258 bhp மற்றும் 400 Nm டார்க்கை வெளிப்படுத்துகிறது.
சூப்பர் கார் சூப்பர் பாஸ்ட்
2.0 லிட்டர் நான்கு சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின்தான் செடானுக்கு இயக்கம் அளிக்கிறது. அதிகபட்சமாக 258 hp மற்றும் 400 Nm டார்க்கை வெளிப்படுத்தும் இந்த எஞ்சின், 6.2 வினாடிகளில் மணிக்கு 0-100 கிமீ வேகத்தை எட்ட உதவுகிறது. கருப்பு நிற ஃபெண்டர் பேட்ஜ்கள், ஹப்கேப்கள், பின்புற பேட்ஜிங், லேசர் பொறிக்கப்பட்ட பிரத்யேக மார்க்கிங் போன்ற M-குறிப்பிட்ட வடிவமைப்பு கூறுகள் M340i 50 ஜாஹ்ரே பதிப்பில் உள்ளன. ஃபயர் ரெட் மெட்டாலிக், பிளாக் சஃபையர், டிராவிட் கிரே, ஆர்க்டிக் ரேஸ் ப்ளூ என நான்கு மெட்டாலிக் வண்ணங்களில் M340i 50 ஜாஹ்ரே பதிப்பு கிடைக்கிறது. 330i M ஸ்போர்ட் சிறப்புப் பதிப்பைப் போலவே, B-பில்லரில் '1/50' பேட்ஜிங்கும், முன்புறம் மற்றும் பின்புற ஹப்கேப்களில் '50 ஜாஹ்ரே' சின்னங்களும் உள்ளன.
ஃபெண்டரில் உள்ள M பேட்ஜிலும், டெயில்கேட்டில் உள்ள M340i பேட்ஜிலும் பளபளப்பான கருப்பு நிற பூச்சு அளிக்கப்பட்டுள்ளது. இது அதன் ஸ்போர்ட்டியர் தோற்றத்தை மேம்படுத்துகிறது. M பெர்ஃபாமன்ஸ் கீ ஃபோப்புடன் இது வருகிறது. M சிறப்பம்சங்களுடன் கூடிய கருப்பு லெதர் வெர்னாஸ்கா அப்ஹோல்ஸ்டரியுடன் உட்புறம் மேம்படுத்தப்பட்டுள்ளது. வாங்குபவர்களுக்கு BMW 3.0 CSL-ன் 1:18 அளவு மாதிரியும் கிடைக்கும்.
ஐந்து தசாப்தங்களாக, ஏழு தலைமுறைகளாக, BMW 3 சீரிஸ் ஓட்டுநர் மகிழ்ச்சியின் மறுக்க முடியாத அளவுகோலாக உள்ளது என்று புதிய வெளியீட்டைப் பற்றி BMW குரூப் இந்தியாவின் தலைவரும் தலைமைச் செயல் அதிகாரியுமான விக்ரம் பாவா கூறினார்.
