Auto Expo 2023: உலகின் முதல் ஹைட்ரஜன் வாகனத்தை அறிமுகப்படுத்தியது எம்ஜி.. சிறப்பம்சங்கள் என்னென்ன?
உலகின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் செல் எம்பிவியை அறிமுகப்படுத்தி உள்ளது எம்ஜி நிறுவனம்.
தற்போது உத்தரபிரதேச மாநிலம், நொய்டாவில் 2023ம் ஆண்டின் இந்தியா எக்ஸ்போ நடந்து வருகிறது. இந்த ஆட்டோ எக்ஸ்போவில் பல்வேறு முன்னணி நிறுவனங்களை சேர்ந்த வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.
இதில் எம்ஜி நிறுவனம் EUNIQ 7 என்ற உலகின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் எம்பிவியை (MPV) அறிமுகப்படுத்தி உள்ளது. எம்ஜி நிறுவனம் அதன் மூன்றாம் தலைமுறை ஹைட்ரஜன் எரிபொருள் நுட்பத்தில் இயங்கும் காரை அறிமுகப்படுத்தி இருக்கிறது.
2001 ஆம் ஆண்டில் ஃபீனிக்ஸ் எண் 1 எரிபொருள் செல் வாகனத் திட்டமாக முதலில் தொடங்கப்பட்டது. புதிதாக உருவாக்கப்பட்ட மூன்றாம் தலைமுறை ஹைட்ரஜன் எரிபொருள் செல் அமைப்பு PROME P390 என்று கூறப்படுகிறது. அதிக ஆற்றல், ஒருங்கிணைந்த வடிவமைப்பு, அதிக நம்பகத்தன்மை போன்ற அதிநவீன அம்சங்களுடன் வருகிறது.
இதுபற்றி கூறிய எம்ஜி நிறுவனம், 92 kW சிஸ்டம் பவரை வழங்கும் எரிபொருள் செல் தொழில்நுட்பம், மிக உயர்ந்த பாதுகாப்பு தரங்களை கடைபிடிக்கிறது. எரிபொருள் சிக்கனத்தை வழங்குகிறது. PROME P390 ஆனது 60 சதவிகிதம் அதிகபட்ச செயல்பாட்டுத் திறனை வழங்குகிறது. இது அதிகபட்சமாக 95 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் இயங்கக்கூடியது.
இதையும் படிங்க..Auto Expo 2023 : கியா முதல் டாடா மோட்டார்ஸ் வரை.. ஆட்டோ எக்ஸ்போவில் கலக்கும் முன்னணி நிறுவனங்கள்!!
மேலும், மைனஸ் 30 டிகிரி செல்சியஸ் வரை என்று கூறப்படுகிறது. ஹைட்ரஜனை எரிபொருளாகக் கொண்டு இயங்கும் எரிபொருள் செல் வாகனங்கள் மாசு இல்லாதவை, வேகமாக எரிபொருள் நிரப்புதல், அதிக சுமை, அதிக செயல்திறன் மற்றும் நீண்ட பேட்டரி ஆயுள் கொண்டவை. PROME P390 EUNIQ 7 இல் சிறந்த செயல்திறனை வழங்கும் என்று எம்ஜி கூறியது.
இந்த வாகனம் பூஜ்ஜிய கார்பன் உமிழ்வைக் கொண்டுள்ளது. ஏனெனில் அது தண்ணீரை மட்டுமே வெளியிடுகிறது. இது ஒரு காற்று சுத்திகரிப்பான் போலவும் செயல்படுகிறது. இதுபற்றி கூறிய எம்ஜி மோட்டார் இந்தியா தலைவர், மனிதனை மையமாகக் கொண்ட தொழில்நுட்பங்கள் மற்றும் நிலைத்தன்மை ஆகிய இரண்டின் அடிப்படையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.
உலகின் முன்னணி ஹைட்ரஜன் எரிபொருள் செல் தொழில்நுட்பத்தை (PROME P390) இந்தியாவிற்கு காட்சிப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இதில் இந்தியாவின் முதல் இணைய SUV, MG ஹெக்டர் அடங்கும். இந்தியாவின் முதல் தூய மின்சார இணைய SUV, MG ZS EV ஆகும்.
இதையும் படிங்க..Auto Expo 2023: அட்டகாசமான அம்சங்களுடன் வெளிவரும் கியா சோனெட் ஃபேஸ்லிஃப்ட்.. என்னென்ன வசதி இருக்கு தெரியுமா ?