செப்டம்பரில் வரவிருக்கும் புதிய மாடல் பைக்குகள்: என்னென்ன அம்சங்கள், விலை எவ்வளவு?

செம்ப்டம்பர் மாதம் இந்திய இரு சக்கர வாகன சந்தையில் பல புத்தம் புதிய வாகனங்கள் வரவுள்ளன

All you need to  know about the upcoming Bike Launches in September smp

கரிஸ்மா முதல் TVS இன் மின்மயமாக்கப்பட்ட X ஸ்கூட்டர் வரையிலான பல புத்தம் புதிய இரு சக்கர வாகன மாடல்கள் இந்திய சந்தையில் நுழைந்துள்ளன. ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், இந்திய வாகனத் துறைக்கு செப்டம்பர் மாதம் நல்ல தொடக்கத்தை அளித்துள்ளது.

ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 vs ஹோண்டா CB 350 RS vs ஜாவா 42 - இவற்றில் எது பெஸ்ட் தெரியுமா.?

இதைத் தொடர்ந்து, இந்த மாதத்தில் இன்னும் பல திட்டமிடப்பட்ட அறிமுகங்களுக்கு பல வாகன உற்பத்தியாளர்கள்  தயாராகி வருகின்றனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 2023 KTM 390 ட்யூக், TVS Apache RTR 310, Suzuki V-Strom 800DE, மற்றும் Aprilia RS440 போன்றவையும் செப்டம்பர் மாதத்தில் சந்தையில் அறிமுகமாகவுள்ளதால் இரு சக்கர வாகன பிரியர்கள் கொண்டாட்ட மனநிலையை உள்ளனர்.

TVS Apache RTR 310


டிவிஎஸ் தனது சமூக ஊடக பக்கங்களில், புதிய Apache RTR 310 பற்றி பதிவிட்டுள்ளது. அதன்படி, இந்த மோட்டார்சைக்கிளில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் பேனல், அலாய் வீல்கள், தலைகீழாக இருக்கும் முன் ஃபோர்க்குகள் போன்ற அம்சங்கள் உள்ளன. இந்த பைக்கில் முன் மற்றும் பின் சக்கரங்களில் இரட்டை சேனல் ஏபிஎஸ் மற்றும் டிஸ்க் பிரேக்குகள் உள்ளன. அபாச்சி RR 310 மாடலில் ட்ராக்ஷன் கண்ட்ரோல், விரைவு-ஷிஃப்டர் போன்ற கூடுதல் அம்சங்களைச் சேர்ப்பது குறித்து TVS பரிசீலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், 313சிசி, சிங்கிள்-சிலிண்டர் எஞ்சின் TVS RTR 310 இன் நேக்கட் வெர்ஷனை இயக்கும்.இது 9,700rpm இல் 33.5bhp, 7,770rpm இல் 27.3Nm ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. விலையை பொறுத்தவரை புதிய Apache RTR 310 இந்தியாவில் ரூ. 2.5 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

New KTM Duke 390


399சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின், புதிய ஸ்டைலிங் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் புதிய கேடிஎம் டியூக் 390 44 பிஎச்பி பீக் பவரையும், 39 என்எம் அதிகபட்ச டார்க்கையும் உருவாக்கும். இது ஒரு ஸ்லிப்பர் கிளட்ச், விரைவான ஷிஃப்டர் மற்றும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் வருகிறது. புதிய கேடிஎம் 390 டியூக்கின் சேஸ்கள் முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இந்த பைக்கில் லாஞ்ச் கன்ட்ரோல் இணைக்கப்பட்டுள்ளது.

2024 மாடலில் பவுடர் கோட்டிங் செய்யப்பட்ட புதிய ஸ்டீல் ட்ரெல்லிஸ் பிரேம் உள்ளது. 43 மிமீ முன் ஃபோர்க்குகள் ரீபவுண்டிற்காக சரிசெய்யப்படலாம். மேலும் மோனோ-ஷாக்கிற்காக ப்ரீலோட் மற்றும் ரீபவுண்ட் செய்யப்படலாம். பிரேக்கிங் சிஸ்டத்தில் புதிய 320மிமீ முன் டிஸ்க், 240மிமீ ரியர் டிஸ்க், டூயல்-சேனல், கார்னரிங் மற்றும் சூப்பர்மோட்டோ ஏபிஎஸ் ஆகியவை அடங்கும். மிச்செலின் டயர்களுடன் கூடிய 17-இன்ச் அலாய் வீல்கள் இரு சக்கர வாகனத்தில் பயன்படுத்தப்படும்.

இந்த பைக்கில் ரெயின், ஸ்ட்ரீட் மற்றும் ட்ராக் ஆகிய மூன்று ரைடிங் மோடுகளும், புதிய 5 இன்ச் கலர் டிஎஃப்டி டேஷும் இருக்கும். அழைப்பு மற்றும் ஒலி கட்டுப்பாடு, ஸ்மார்ட்போன் இணைப்பு மற்றும் பிற அம்சங்கள் சிறப்பம்சங்களாக இருக்கும். இந்தியாவில் இதன் ஆரம்ப விலை ரூ.2.38 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என எதிர்பார்க்கப்படுகிறது.

Suzuki V-Strom 800DE


EICMA 2022 இல் வெளியிடப்பட்ட Suzuki V-Strom 800DE, புத்தம் புதிய 776cc பேரலல்-ட்வின் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இந்த பைக், 8,500 ஆர்பிஎம்மில் 82 பிஎச்பி பவரையும், 6,800 ஆர்பிஎம்மில் 78 என்எம் ஆற்றலையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்ட இந்த பைக்கின் கிரவுண்ட் கிளியரன்ஸ் 220 மிமீ மற்றும் இருக்கை உயரம் 855 மிமீ ஆக உள்ளது. 21 அங்குல முன் சக்கரம் மற்றும் பிற மேம்பாடுகளை கொண்டிருக்கும். தோற்றம் வாரியாக, Suzuki V-Strom 800DE ஆனது, மிகவும் நிதானமான சவாரியை கொண்டதாக இருக்கும்.

ஒரு குறுகிய விண்ட்ஸ்கிரீன் மற்றும் கவனிக்கத்தக்க பீக் ஆகியவற்றைக் கொண்ட உயரமான ஹேண்டில்பார்களை உள்ளடக்கியிருக்கும். வைசர் மற்றும் செங்குத்தான எல்இடி ஹெட்லேம்ப்கள் இருக்கும். Suzuki V-Strom 800DE விலை ரூ.12 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது. இது இந்தியாவில் உள்ள BMW F850 GS மற்றும் Triumph Tiger 900 போன்ற தயாரிப்புகளுக்கு போட்டியாக இருக்கும்.

Aprilia RS440


இத்தாலிய பைக் தயாரிப்பாளரான அப்ரிலியா தனது புதிய RS440 மாடலை இந்த மாதம் வெளியிட உள்ளது. புதிய மோட்டார்சைக்கிள் 440சிசி, பேரலல்-ட்வின், லிக்விட்-கூல்டு எஞ்சின் மூலம் அதிகபட்சமாக 48 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்லிப்பர் கிளட்ச் மற்றும் விரைவு-ஷிஃப்டருடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டதாக இருக்கும்.

மோட்டார் சைக்கிள் அதிகபட்சமாக மணிக்கு 180 கிமீ வேகத்தை எட்டும். RS440 ஆனது ரைடு-பை-வயர், டிராக்ஷன் கண்ட்ரோல் மற்றும் கார்னரிங் ஏபிஎஸ் உள்ளிட்ட புதிய அம்சங்களைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம், அனைத்து-எல்இடி லைட்டிங் சிஸ்டம், ஸ்மார்ட்ஃபோன் இணைப்புடன் கூடிய முழு டிஜிட்டல் டிஎஃப்டி டிஸ்ப்ளே உள்ளிட்டவைகள் இருக்கலாம். இந்திய பாதுகாப்புத் தரங்களுக்கு இணங்க சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கலாம்.

RS440 ஆனாது, பின்புறத்தில் ஒரு மோனோ-ஷாக் மற்றும் ஒரு தலைகீழான முன் போர்க்கைக் கொண்டிருக்கும். பிரேக்கிங் சிஸ்டத்தில் ஏபிஎஸ் உடன் ஒரு முன்புற மற்றும் பின்புற டிஸ்க் மட்டுமே இருக்கும். இந்த பைக் 17-இன்ச் அலாய் வீல்களில் TVS Eurogrip டயர்களுடன் வரவுள்ளது. நேர்த்தியான பிரேக் ரோட்டர்கள், ஒரு ரேடியல் முன் பிரேக் காலிபர் மற்றும் லைட் அலாய் ரிம்களும் சேர்க்கப்படலாம். இந்த பைக்கானது KTM RC 390, கவாஸாகி நிஞ்ஜா 400 மற்றும் விரைவில் அறிமுகமாகும் Yamaha YZF-R3 போன்ற பைக்குகளுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios