New Hyundai Venue இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த சப்-காம்பாக்ட் எஸ்யூவியின் முழுமையான விலை விபரங்கள் இப்போது வெளியாகியுள்ளன. பெட்ரோல், டர்போ-பெட்ரோல், டீசல் மற்றும் என் லைன் வேரியண்ட்கள் விலை வெளியிடப்பட்டுள்ளன.

புதிய ஹூண்டாய் வென்யூ இப்போது இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. ஆரம்பத்தில், HX2, HX4, HX5 பெட்ரோல் (NA) மேனுவல் வேரியண்ட்களுக்கு முறையே ரூ.7.90 லட்சம், ரூ.8.80 லட்சம், ரூ.9.15 லட்சம் என விலை அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது, இந்த சப்-காம்பாக்ட் எஸ்யூவியின் முழுமையான விலை பட்டியல் வெளியாகியுள்ளது.

HX6, HX 6T பெட்ரோல் (NA) மேனுவல் வேரியண்ட்களுக்கு முறையே ரூ.10.43 லட்சம் மற்றும் ரூ.10.70 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டர்போ-பெட்ரோல் மேனுவல் வேரியண்ட்களுக்கு ரூ.8.80 லட்சம் முதல் ரூ.11.81 லட்சம் வரையிலும், டர்போ-பெட்ரோல் DCT டிரிம்களுக்கு ரூ.10.67 லட்சம் முதல் ரூ.14.56 லட்சம் வரையிலும் விலை உள்ளது. டீசல் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்களுக்கு முறையே ரூ.9.70 லட்சம் முதல் ரூ.12.51 லட்சம் வரையிலும், ரூ.11.58 லட்சம் முதல் ரூ.15.51 லட்சம் வரையிலும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிய ஹூண்டாய் வென்யூ என் லைன் விலைகள்

2025 ஹூண்டாய் வென்யூ என் லைன் மேனுவல் வேரியண்ட்டுக்கு ரூ.10.55 லட்சமும், என்6 மற்றும் என்10 டிசிடி வேரியண்ட்களுக்கு முறையே ரூ.11.45 லட்சம் மற்றும் ரூ.15.30 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக ரூ.18,000 செலுத்தி, HX6, HX6T, HX7, HX8, HX10, N Line N6 DCT, மற்றும் N Line N10 DCT ஆகிய வேரியண்ட்களில் டூயல்-டோன் வண்ண விருப்பங்களை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யலாம். இதில் அபிஸ் பிளாக் ரூஃப் உடன் ஹேசல் ப்ளூ மற்றும் அட்லஸ் ஒயிட் ஆகிய டூயல்-டோன் ஷேடுகள் அடங்கும். மோனோடோன் வண்ணத் தேர்வுகளில் அபிஸ் பிளாக், டிராகன் ரெட், ஹேசல் ப்ளூ, அட்லஸ் ஒயிட், மிஸ்டிக் சஃபையர் மற்றும் டைட்டன் கிரே ஆகியவை அடங்கும்.

புதிய 2025 ஹூண்டாய் வென்யூ விலைகள்

வேரியண்ட் வாரியாக எக்ஸ்-ஷோரூம் விலை

பெட்ரோல்-எம்.டி. –

எச்எக்ஸ்2 ரூ.7.90 லட்சம்

எச்எக்ஸ்4 ரூ.8.80 லட்சம்

எச்எக்ஸ்5 ரூ.9.15 லட்சம்

எச்எக்ஸ்6 ரூ.10.43 லட்சம்

எச்எக்ஸ் 6டி ரூ.10.70 லட்சம்

டர்போ-பெட்ரோல் எம்.டி. –

எச்எக்ஸ்2 ரூ.8.80 லட்சம்

எச்எக்ஸ்5 ரூ.9.74 லட்சம்

எச்எக்ஸ்8 ரூ.11.81 லட்சம்

N6 (N லைன்) MT ரூ.10.55 லட்சம்

டர்போ-பெட்ரோல் டிசிடி –

எச்எக்ஸ்5 ரூ.10.67 லட்சம்

எச்எக்ஸ்6 ரூ.11.98 லட்சம்

எச்எக்ஸ்8 ரூ.12.85 லட்சம்

எச்எக்ஸ்10 ரூ.14.56 லட்சம்

N6 (N லைன்) ரூ.11.45 லட்சம்

N10 (N லைன்) ரூ.15.30 லட்சம்

டீசல்-எம்டி –

எச்எக்ஸ்2 ரூ.9.70 லட்சம்

எச்எக்ஸ்5 ரூ.10.64 லட்சம்

எச்எக்ஸ்7 ரூ.12.51 லட்சம்

டீசல்-ஏ.டி. –

எச்எக்ஸ்5 ரூ.11.58 லட்சம்

எச்எக்ஸ் 10 - ரூ.15.51 லட்சம்