இன்றைய ராசி பலன்கள் உங்கள் வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தும். தொழில், குடும்பம், நிதி, கல்வி என அனைத்து அம்சங்களிலும் மாற்றங்கள் நிகழும். உங்கள் ராசிக்கான பலன்களை அறிந்து கொண்டு நாளை சிறப்பாகத் தொடங்குங்கள்.
மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை 1)
அன்புள்ளம் கொண்ட மேஷராசி நேயர்களே இன்று உங்கள் செயல்களில் உற்சாகமும் உறுதியும் நிறைந்திருக்கும் நாள். பணியிடத்தில் உங்களின் முயற்சிகள் மேன்மை பெறும். மேலாளர்களின் பாராட்டும் கூட கிடைக்க வாய்ப்பு உண்டு. தொழில் முயற்சிகளில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும்; புதிய திட்டங்களை செயல்படுத்த ஏற்ற நாளாக அமையும். பண வரவு திருப்திகரமாக இருக்கும்; ஆனால் செலவிலும் கட்டுப்பாடு தேவை. குடும்பத்தில் சிறிய மனஸ்தாபங்கள் ஏற்படலாம், ஆனால் சமாதானமாக பேசி தீர்த்துக்கொள்ள முடியும். மன அழுத்தம் குறைவாக இருக்கும். நண்பர்கள் சிலர் உதவ முன்வரக்கூடும். வாகன பயணங்களில் கவனமார இருக்க வேண்டும். மாணவர்களுக்கு தகுந்த முயற்சியில் நம்பிக்கை ஏற்படும். ஆரோக்கியம் பேண, உணவுப் பழக்கங்களில் கட்டுப்பாடு தேவைு. இன்று வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அதிர்ஷ்ட எண்: 5
ரிஷபம் (கார்த்திகை 2,3,4, ரோகிணி, மிருகசீரிடம் 1,2)
எதையும் நிதானமாக செய்யும் ரிஷப ராசி நேயர்களே இன்று திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் உங்கள் இலக்குகளை எளிதாக அடைய முடியும். முக்கியமான நபர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில் தொடர்பான பயணங்கள் சாதகமாக இருக்கும். புதிய வருமான வாய்ப்புகள் வரும். சொத்து வாங்கும் எண்ணங்கள் இருப்பின் இன்று நல்லதொரு நாள். குடும்பத்தில் மகிழ்ச்சி சூழ்நிலை நிலவக்கூடும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவும் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறப்பாக செயல்படுவார்கள். வாகனங்கள், மின் சாதனங்கள் தொடர்பாக செலவுகள் ஏற்படலாம், ஆனால் அவை தேவையானவை. மனதளவில் அமைதி பெருகும். பழைய மன அழுத்தங்களை விட வேண்டிய நாள். கடன் நிலைகள் சீராகும். நலமுடன் இருக்க யோகாசனம், சைவ உணவுகள் உதவியாக இருக்கும். குழந்தைகள் தொடர்பாக மகிழ்ச்சியான செய்தி வரும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, அதிர்ஷ்ட எண்: 2
மிதுனம் (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3)
உண்மையின் பக்கம் நிக்கும் மிதனராசி நேயர்களே இன்றைய பொழுதை திட்டமிட்டு ஆரம்பித்தால் எதிலும் வெற்றி பெற முடியும். அலுவலக வேலைகள் வெற்றிகரமாக நடைபெறும். புதிய பொறுப்புகள் உங்களை நம்பிக்கையுடன் நிரப்பும். உங்கள் திறமையை நிரூபிக்க சரியான சூழ்நிலை வரும். வணிகத்தில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். போட்டி வர்த்தகத்தில் முன்னிலை கிடைக்கும். குடும்பத்தில் சிறிய கருத்து வேறுபாடுகள் எழலாம், ஆனால் விரைவில் தீரும். மனைவியின் பங்களிப்பால் நிம்மதி கிடைக்கும். நண்பர்கள் வழியே நன்மைகள் வந்து சேரும். மாணவர்களுக்கு நிதானமாகப் படிப்பு தேவை. மன அழுத்தம் குறைக்க ஓய்வு தேவைப்படும். இன்று உடல் உற்சாகம் சற்று குறைந்திருக்கும். வாஸ்து அல்லது இல்லசீரமைப்பில் கவனம் செல்லலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், அதிர்ஷ்ட எண்: 7
கடகம் (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்)
அன்பான வார்த்தைகளால் எல்லோரையும் கவரும் கடகராசி நேயர்களே இன்று குடும்பத்தில் அமைதி நிலவக் கூடிய நாள். உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். தொழில் வளர்ச்சிக்கும், புதிய தொடக்கங்களுக்கும் இன்றைய பொழுது உகந்தது. உங்கள் ஆலோசனைகள் மற்றவர்களால் ஏற்றுக்கொள்ளப்படும். பண வருவாய் திருப்திகரமாக இருக்கும். வருவாயைக் கூடுதலாகச் சேமிக்க முடியும். குடும்ப உறுப்பினர்களுடன் நேரம் செலவிடும் போது மனநிம்மதி பெருகும். வாஸ்து மாற்றம், புதிய பொருட்கள் வாங்குதல் போன்ற விஷயங்களில் இன்று முயற்சி செய்யலாம். மாணவர்களுக்கு புதிய வாய்ப்புகள் வந்து சேரும். உடல் ஆரோக்கியம் மேம்படும், ஆனால் வயிறு சம்பந்தப்பட்ட எச்சரிக்கைகள் தேவை. நீண்டநாள் பயண திட்டங்கள் அமையலாம். உங்களது மன அழுத்தங்களை தவிர்ப்பதற்காக புத்தகங்கள், இசை போன்ற வழிகளில் ஈடுபடலாம்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, அதிர்ஷ்ட எண்: 4
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1)
நண்பர்களையும், உறவினர்களையும் தலைமையேற்று நல்வழிப்படுத்தும் சிம்மராசி நேயர்களே இன்று நீங்கள் சில சவால்களை சந்திக்க நேரிடும், ஆனால் உங்கள் தைரியமும் திட்டமிடும் ஆற்றலும் வெற்றி தரும். தொழிலில் புதிய திட்டங்களை தொடங்கலாம். சிலருக்கு பணபிரச்சினை வரலாம், ஆனால் அது தற்காலிகம். உடனடி முதலீடுகள் செய்ய வேண்டாம். மனதில் சங்கடங்களை உருவாக்கும் விஷயங்களை தவிருங்கள். குடும்பத்தினர் உதவ முன்வருவார்கள். தொழிலில் உள்ள போட்டிகளை நம்பிக்கையுடன் எதிர்கொள்வீர்கள். குழந்தைகளின் கல்வி தொடர்பான நல்ல செய்தி வரக்கூடும். அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். வீட்டு வேலைகளில் அதிக ஈடுபாடு தேவைப்படும். வாகன விஷயங்களில் கவனமாக இருங்கள். ஆன்மிகம் மற்றும் தியானத்தில் ஈடுபடுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, அதிர்ஷ்ட எண்: 9
கன்னி (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2)
அறிவாற்றலும் புத்திசாலித்தனமும் கூடிய கன்னிராசி நேயர்களே இன்று உங்கள் சிந்தனைகள் தெளிவாக இருக்கும். திட்டமிட்டு செயல்படுத்தி முன்னேற்றம் காண்பீர்கள். தொழிலில் பெரிய முன்னேற்றம் கிடைக்கும். வேலை தேடும்வர்கள் நம்பிக்கையுடன் முயற்சி மேற்கொள்ளலாம். குடும்பத்தில் பழைய பிரச்சனைகள் தீரும். கணவன்/மனைவி இடையிலான உறவுகள் மேலும் உறுதியடையும். மாணவர்கள் தேர்வுகளில் வெற்றி பெறுவர். உங்கள் சொத்து தொடர்பான ஆவணங்களில் முன்னேற்றம் ஏற்படும். கணினி அல்லது தொழில்நுட்ப துறையில் இருப்பவர்களுக்கு சிறப்பு வாய்ப்பு. வியாபாரத்தில் புதுமை தேடுதல் நன்மை தரும். உடல்நலம் சீராக இருக்கும். சிறிய துன்பங்கள் தீரும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 6
துலாம் (சித்திரை 3,4, ஸ்வாதி, விசாகம் 1,2,3)
தெளிவான சிந்தனையும், உதவும் எண்ணமும் கொண்ட தூலாம் ராசி நேயர்களே இன்று உங்கள் பணியிடம் மற்றும் நிதியமைப்பில் முக்கியமான முன்னேற்றங்கள் ஏற்படும். சிறிய முயற்சிகளும் பெரிய வெற்றிகளையும் தரும் நாள். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உங்கள் வார்த்தைகள் மற்றவர்களுக்கு உந்துசக்தியாக அமையும். வணிகத்தில் எதிர்பார்த்திருந்த திட்டம் இப்போது தொடங்கலாம். மனதில் இருந்து தேவையற்ற கவலைகளை விலக்க வேண்டும். சிலருக்கு பழைய நபர்கள் தொடர்பு கொள்வார்கள். மாணவர்களுக்கு கல்வியில் நம்பிக்கை தேவை. பணிவழியில் நினைத்ததைச் சொல்லும் போது முன்னேற்றம் கிடைக்கும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். புதிய உறவுகள் உருவாக வாய்ப்பு.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 3
விருச்சிகம் (விசாகம் 4, அனுஷம், கேட்டை)
எல்லோரையும் நல்வழிப்படுத்தும் விருச்சிகராசி நேயர்களே தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்த இது ஒரு சிறந்த நாள். அலுவலக வேலைகளில் உங்களைத் தேர்ச்சியாக நிரூபிக்க நேரம் இது. மேலாளர்கள் உங்கள் திறமையை புரிந்து கொள்வார்கள். தொழிலில் ஏற்பட்ட சிக்கல்கள் இன்று குறையும். குடும்பத்தில் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் உதவி கிடைக்கும். நிதியில் நல்ல முன்னேற்றம், ஆனால் செலவுகளும் கூடலாம். வங்கிக்கடன்கள் தொடர்பாக சிக்கல்கள் வரலாம். ஆரோக்கியத்தில் மன அழுத்தத்தை தவிர்க்கும் வழிகளை முயற்சிக்க வேண்டும். பயணங்களில் பாதுகாப்பு அவசியம்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளி
அதிர்ஷ்ட எண்: 1
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1)
இன்று உங்கள் மன உறுதி சோதிக்கப்படும் நாள். பணியிடம் மற்றும் வியாபாரத்தில் சில தடைகள் வரும், ஆனால் நிதானமாக நடந்து கொண்டால் சாதனைக்கான வாய்ப்பு இருக்கும். புதிய முயற்சிகளில் கால தாமதம் ஏற்படலாம். குடும்பத்தில் நெருக்கமாக இருங்கள், தாயாரின் ஆசீர்களால் நன்மைகள் உண்டு. வாகன பயணங்களில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு. மாணவர்களுக்கு கவனமாக படிக்க வேண்டிய அவசியம் உள்ளது. உங்கள் சந்தேகங்களை தீர்த்து முன்னேறும் முயற்சிகள் அவசியம். முக்கிய முடிவுகள் எடுக்கும் முன் ஆலோசிக்கவும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 8
மகரம் (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2)
எல்லோரையும் சுண்டி இழக்கும் அழகுடன் இருக்கும் மகர ராசி நேயர்களே, இன்று உங்கள் திறமைகளை வெளிக்கொணர தேவையான சந்தர்ப்பங்கள் வரும். தொழில் வளர்ச்சிக்கு புதிய வாய்ப்புகள் வரும். வேலை தேடும்வர்கள் காத்திருந்த நல்ல செய்தி பெறக்கூடும். குடும்பத்தில் மன அமைதி ஏற்படும். மனைவியுடன் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் விரைவில் தீரும். மிதமான செலவுகளால் சேமிப்பு சாத்தியம் உள்ளது. சமூக வட்டங்களில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். வாகன விஷயங்களில் கவனமுடன் இருங்கள். மனநலம் மேம்படும். ஆன்மிக ஈடுபாடுகள் மனநிம்மதியை தரும்.
அதிர்ஷ்ட நிறம்: மெரூன், அதிர்ஷ்ட எண்: 7
கும்பம் (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3)
சொல்வதை மட்டும் செய்யும் கும்பராசி நேயர்களே இன்று உங்கள் வாழ்க்கையில் முக்கியமான மாற்றங்களை எதிர்பார்க்கலாம். புதிய வேலை வாய்ப்பு, வியாபார வாய்ப்பு போன்றவை வந்து சேரும். பழைய உறவுகள் திரும்பக் கொள்வார்கள். செலவுகளை கட்டுப்படுத்தாமல் விட்டால் சிக்கல்கள் வரக்கூடும். குடும்பத்தில் சிந்தனைகளை வெளிப்படுத்தும்போது சுறுசுறுப்பாக இருங்கள். மாணவர்களுக்கு போட்டி தேர்வுகளில் கவனமாக இருப்பது நன்மை தரும். வெளி உண்ணும் பழக்கத்தில் கட்டுப்பாடு தேவை. உடல் சோர்வை தவிர்க்க ஓய்வை பெறுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: கருநீலம் அதிர்ஷ்ட எண்: 6
மீனம் (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி)
நல்லது செய்வதையே தொழிலாக கொண்டு இருக்கும் மீனராசி நேயர்களே இன்று உங்கள் கண்ணோட்டம் தெளிவாக இருக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழிலில் மேலாளர்களின் பாராட்டும், ஊக்கமும் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வி மற்றும் அறிவியல் துறையில் சிந்தனைத் திறன் அதிகரிக்கும். குடும்ப உறவுகள் நெருக்கமாகும். பணவரவு அதிகரிக்கும், ஆனால் அதேபோல் செலவுகளும் இருப்பதால் முன்னேற்பாடுகள் அவசியம். வாகன செலவுகள் மற்றும் வீட்டு பொருட்களில் காசு செலவாகும். ஆன்மிக நம்பிக்கையுடன் செயல்படுவதால் மன நிம்மதி ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 2
