இன்றைய ராசி பலன்கள் பல்வேறு சுவாரஸ்யமான திருப்பங்களையும் சவால்களையும் கொண்டுள்ளன. சில ராசிகளுக்கு அதிர்ஷ்டமும் நல்ல செய்திகளும் காத்திருக்க, மற்றவர்களுக்கு சற்று கவனமும் பொறுமையும் தேவைப்படும்.
மேஷம்:
அன்புக்கு அடிமையாகும் மேஷராசியினரே! இன்று எடுத்த காரியம் வெற்றி அடையும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். பெற்றோர் வழியில் கொஞ்சம் செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உடன் பிறந்த சகோதர சகோதிரிகளுக்கு உதவும் சூழல் ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் தனலாபத்திற்கும் அதிக வாய்ப்புகள் உண்டு. மதியத்திற்கு மேல் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வருகை சிரமங்கள் தர வாய்ப்புகள் உண்டு. தம்பதிகள் இடையே அன்பு மலரும். ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வர். பணிபுரியும் இடத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. நல்ல சித்தனைகளும் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற சிந்தனையும் அதிகரிக்கும்.
ரிஷபம்:
கொடுத்து மகிழும் கரங்களை கொண்ட ரிஷபராசியினருக்கு அரசாங்கக் காரியங்கள் சாதகமாக இருக்கும், அதில் வெற்றி கிடைக்கும். உறவினர்கள் வழியில் கேட்ட உதவிகள் உடனே கிடைக்கும். குடும்பத்தில் அன்பும் அமைதியும் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணைவழி உறவினர் களால் ஆதாயம் ஏற்படும். அம்மா அப்பாவின் தேவைகளை நிறைவேற்றி மகிழ்ச்சி அடைவீர்கள். பணிபுரியும் இடத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். சக ஊழியர்கள் உதவி செய்வர்.வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களுடன் இணக்கமாக நடந்துகொள்வது நல்லது.மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.
மிதுனம்:
எப்போதும் இன்முகத்துடன் இருக்கும் மிதுனராசியினர, இன்று உங்களுக்கு மனதில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். புதிய முயற்சிகளிலும் செயல்களிலும் ஈடுபடுவதை தவிர்க்கவும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவதில் தடைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.பிள்ளைகளால் சில சங்கடங்கள் ஏற்படும். ஹோட்டல்கள் போன்ற வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. மாலையில் குடும்பத்துடன் கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் சக ஊழியர்களால் சில தொல்லைகள் ஏற்படக்கூடும். வணிகத்தில் வாடிக்கையாளர்களிடம் இணக்கமாக நடந்துகொள்வது அவசியம். குலதெய்வ வழிபாடு நன்மை அளிக்கும். விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.
கடகம்:
மனதில் பட்டதை அப்படியே சொல்லும் கடகராசி அன்பர்களே! இன்று உங்களுக்கு சந்தோஷத்தை வழங்கும் நாள், உற்சாகம் அளிக்கும் நாள். புதிய முயற்சிகளை காலையிலேயே தொடங்கினால் நல்ல பலனை அளிக்கும். சிலருக்கு பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். பிறரால் ஏற்படும் சிரமங்கள் விலகியோடும். உற்றார் உறவினர்கள் வருகை சந்தோஷத்தை அள்ளித்தரும். உடன் பிறந்தவர்களால் நன்மை உண்டு. வேலை பார்க்கும் இடத்தில் பணிச்சுமை சற்று அதிகரிக்கும் என்றாலும், உடன் பணிபுரியும் ஊழியர்கள் ஆதரவு கரம் நீட்டுவார்கள். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கக்கூடும்.
சிம்மம்:
எந்த காரியத்தையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்யும் சிம்மராசியில் பிறந்தவர்களே! இன்று உங்களுக்கு எடுத்த காரியங்களில் அனுகூலம் உண்டாகும். கணவனால் மனைவிக்கோ, மனைவியால் கணவனுக்கோ மகிழ்ச்சி செய்தி கிடைக்கும். உடல்நலனில் சற்று கவனம் தேவைப்படும் நாள். கணவன் - மனைவிக்கிடையே அன்பும் அரவனைப்பும் அதிகரிக்கும். நண்பர்களும் உறவினர்களும் உதவி கேட்டு தொடர்புகொள்வார்கள். தாய் தந்தையரின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழ்வீர்கள். பணிபுரியும் இடத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.
கன்னி:
சொன்ன சொல்லை காப்பாற்றும் கன்னிராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு தன்நம்பிக்கை கொடுக்கும் நாள். முடிவுகளைத் தெளிவாகச் சிந்தித்து எடுப்பீர்கள். உடன் பிறப்புக்கள் உதவி கேட்டு வருவார்கள். சிலருக்கு எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. நீண்ட நாட்களாக செய்ய முடியாமல் இழுபறியில் இருந்த காரியம் அனுகூலமாக முடியும். அலுவலகத்தில் பணிச்சுமை சற்று அதிகரித்தாலும் உற்சாகமாகச் செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் பலமடங்கு அதிகரிக்கும்.சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.
துலாம்:
அடுத்தவர்களை மதித்து நடத்தும் துலாராசி அன்பர்களே! இன்று உங்களுக்கு மகிழ்ச்சி தரும் நாளாக அமையும். பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. புதிய முயற்சிகளைக தவிர்ப்பது நல்லது. சிலருக்கு வெளியூர்களில் இருக்கும் கோயிலுக்கு செல்லும் வாய்ப்பு ஏற்படும். மாலையில் விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். வியாபாரத்தில் பணியாளர்களால் செலவுகள் ஏற்படும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். கொடுத்த கடன்கள் திரும்பி வரும்.
விருச்சிகம்:
எதையும் மறைத்து பேசாத விருச்சிகராசி அன்பர்களே! இன்று உங்களுக்கு அதிர்ஷ்டகரமான நாள். எதிர்பாராத பொருள்சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. கணவன் - மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்துவேறுபாடு விலகி அந்நியோன்யம் அதிகரிக்கும். தந்தை மற்றும் தாயின் அன்பும் ஆதரவும் சந்தோஷம் தருவதாக இருக்கும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். எதிர்பார்த்த சலுகை இன்று கிடைக்கக்கூடும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் அள்ளித்தரும் நாள்.
தனுசு:
உதவும் மனப்பான்மை கொண்ட தனுசுராசியினரே! இன்று புதிய முயற்சிகளை தவிர்க்கவும். தேவையற்ற செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. சகோதர சகோதரிகள் வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். தந்தையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உண்டு என்பதால் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். இஷ்ட தெய்வத்தை வழிபடுவது நல்ல பலனை கொடுக்கும்.
மகரம்:
கொடுத்து கொடுத்து சிவந்த கரங்களை கொண்ட மகரராசி அன்பர்களே! இன்று உங்களுக்கு சந்தோஷமான நாள். அரசு தொடர்பான காரியங்கள் அனுகூலமாக முடியும். சிலருக்கு எதிர்பாராத பொருள்சேர்க்கைக்கு வாய்ப்பு ஏற்படும். தந்தையுடன் இருந்து வந்த கருத்துவேறுபாடு நீங்கி, தந்தையின் அன்பும் ஆதரவும் எப்பதும் போல் கிடைக்கும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகள், நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நினைத்த காரியம் கைகூடும்.அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் சந்தோஷம் உண்டாகும்.
கும்பம்:
அமைதியான சுபாபம் கொண்ட கும்பராசியினரே! இன்று புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. பிரருடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். மனதில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். பொறுமையும் நிதானமும் தேவைப்படும் நாள். அலுவலகத்தில் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படும். சக ஊழியர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களால் பிரச்னை ஏற்பட்டாலும் பொறுமை அவசியம்.அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணங்களைத் தவிர்ப்பது அவசியம்.சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையுடன் அனுசரணையாக நடந்து கொள்ளவும்.
மீனம்:
உதவி செய்யும் மனப்பான்மை கொண்ட மீனராசி அன்பர்களே! புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது நல்லது. இன்று எந்த விஷயத்திலும் நிதானத்தை கடைப்பிடிப்பது அவசியம். மற்றவர்களுடன் விவாதம் செய்ய நேரிட்டால் விலகிச் செல்வது நல்லது. உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படக் கூடும். பிள்ளைகளால் செலவுகள் ஏற்படும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிப்பதால் சோர்வு ஏற்படும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் பிரச்னைகள் ஏற்படக்கூடும். பொறுமை அவசியம்.உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குடும்பப் பொறுப்புகளின் காரணமாக அலைச்சல் ஏற்படும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நீண்ட நாள்களாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.