Today Rasi Palan : செப்டம்பர் 16, 2025 தேதி துலாம் ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

பொதுவான பலன்கள்:

இன்று நீங்கள் ஆற்றலுடனும், நம்பிக்கையுடனும் உணர்வீர்கள். உங்கள் வேலைகளை சரியான நேரத்தில் முடிக்கும் சக்தி உங்களிடம் இருக்கும். சவாலான சூழ்நிலையும் சமாளிப்பீர்கள். உங்கள் அமைதியும், சமநிலையையும் இழக்க மாட்டீர்கள். புதிய முயற்சிகள் தொடங்க இது ஒரு நல்ல நாள். குறிப்பாக கலை, படைப்பாற்றல் தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு இது சாதகமான நாளாக அமையும்.

நிதி நிலைமை:

நிதி நிலைமையில் மிதமான முன்னேற்றம் இருக்கும். எதிர்பாராத வகையில் வருமானங்கள் வர வாய்ப்பு உள்ளது. முதலீடு செய்வதற்கு முன்னர் அவசரமாக முடிவெடுக்காமல், அமைதியாக யோசித்து நிபுணர்களை கலந்தாலோலசித்து பின்னர் முடிவெடுக்க வேண்டும். ஆடம்பர செலவுகளை குறைப்பது, உங்கள் நிதி நிலைமைக்கு நன்மை தரும். பட்ஜெட் போட்டு செலவு செய்வது நல்லது.

தனிப்பட்ட வாழ்க்கை:

குடும்ப உறவுகளில் இணக்கம் உண்டாகும். உங்கள் துணையுடன் மனம் விட்டு பேசுவது உறவை வலுப்படுத்தும். திருமணமாகாதவர்களுக்கு பொருத்தமான துணையை கண்டறிய வாய்ப்புகள் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் அன்பாகவும், பொறுமையாகவும் நடந்து கொள்ள வேண்டியது முக்கியம். சிறு பிரச்சனைகளை பெரிதாக்க வேண்டாம். சிறிய தவறான புரிதல் கூட பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்தி விடும்

பரிகாரங்கள்:

வெள்ளை நிற ஆடைகளை அணிவது செழிப்பை கொண்டு வரும். துர்க்கை அம்மனை வழிபடுவது மனதிற்கு அமைதியையும், அதிர்ஷ்டத்தையும் அதிகரிக்கும். வாயில்லா ஜீவன்களுக்கு உணவளிப்பது, ஏழைகளுக்கு அன்னதானம் செய்வது அல்லது உதவி செய்வது உங்கள் கர்ம பலனை சரி செய்யும்.

முக்கிய குறிப்பு:

இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.