Saturn Retrograde 2025 Predictions in Tamil : சனி பகவானின் வக்ர பெயர்ச்சி காலம் வரும் ஜூலை 13ஆம் தேதி தொடங்கி நவம்பர் 28ஆம் தேதி வரையில் இருக்கும். இந்த காலங்களில் கடகம், மகரம் மற்றும் கும்பம் ஆகிய ராசிகளுக்கு நல்ல காலம் பிறக்கும்.

Saturn Retrograde 2025 Predictions in Tamil : ஜோதிட சாஸ்திரத்தில் சனி பகவான் மட்டுமே ஒவ்வொரு 2 ½ ஆண்டுகளுக்கு ஒரு முறை பெயர்ச்சி ஆவார். மற்ற கிரகங்கள் 1 ½ வருடம், ஒரு வருடம் என்று பெயர்ச்சி ஆகும். அந்த வகையில் வரும் ஜூலை மாதம் 13 ஆம் தேதி சனி பகவானின் வக்ர பெயர்ச்சி காலம் தொடங்கி நவம்பர் 28ஆம் தேதி வரையில் சனியின் வக்ரம் இருக்கும். அதன் பிறகு சனி பகவான் தனது இயல்பு நிலைக்கு திரும்புவார்.

சனி வக்ர பெயர்ச்சி 2025 

சனி வக்ர பெயர்ச்சியில் இருக்கும்போது, சில ராசிகளுக்கு சுயபரிசோதனை, கர்ம பலன்கள், தடைகளைத் தாண்டிச் செல்லும் திறன் ஆகியவற்றை அதிகரிக்கும். சரியான பாதையில் செயல்படுபவர்களுக்கு அற்புதமான பலன்களைத் தரும். சனியின் வக்ர பெயர்ச்சியால் கடகம், மகரம் மற்றும் கும்பம் ஆகிய 3 ராசிகளுக்கு என்னென்ன பலன் உண்டாகும் என்பது பற்றி பார்க்கலாம்.

சனி வக்ர பெயர்ச்சியால் பலன் பெறும் ராசிகள்

கடக ராசிக்கான வக்ர பெயர்ச்சி பலன்:

கடக ராசிக்காரர்களுக்கு சனி வக்ர பெயர்ச்சி ஏராளமான நல்ல பலன்களைத் தரும். இந்தக் காலகட்டத்தில் உங்கள் செயல்திறனால் அங்கீகாரம் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். புதிய வருமான வழிகள் திறக்கும். வேலைக்குச் செல்பவர்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. நீண்ட நாள்களாக நிலுவையில் இருந்த பணிகள் நிறைவேறும். சில பிரச்சனைகள் தீரும். முக்கியமான பணிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பம் தொடர்பான நல்ல செய்திகள் கிடைக்கும்.

மகரம் ராசிக்கான சனி வக்ர பெயர்ச்சி பலன்:

மகர ராசிக்காரர்கள் ஏழரைச் சனியின் தாக்கத்தில் இருப்பார்கள். ஆனால் வக்ர நிலையில் உள்ள சனி சில நன்மைகளைச் செய்வார். தொழிலில் நல்ல முன்னேற்றம், வாழ்க்கைத் தரம் உயரும். வேலை, தொழில் இரண்டிலும் முன்னேற்றம் தெரியும். பயணங்கள் லாபகரமாக இருக்கும். வணிகப் பயணம் லாபம் தரும். தேவையற்ற செலவுகளைக் குறைப்பீர்கள். நிதி நிலைமை மேம்படும். நீண்ட நாள் நோய்களில் இருந்து நிவாரணம் கிடைக்கும். மன அழுத்தம் குறையும். முதலீடு செய்ய இது நல்ல நேரம். ஆனால் புத்திசாலித்தனமாக முடிவுகளை எடுக்க வேண்டும்.

கும்பம் ராசிக்கான சனி வக்ர பெயர்ச்சி பலன் தமிழ்:

ஜோதிட சாஸ்திரத்தின்படி, கும்ப ராசிக்காரர்கள் சனியின் அருளால் நல்ல பலன்களைப் பெற வாய்ப்புள்ளது. தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். மனதிற்கு மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். வருமான வழிகள் அதிகரிக்கும். வங்கி இருப்பு உயரும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த திட்டங்கள் இப்போது நிறைவேறும். நீண்ட நாள் பிரச்சனைக்குத் தீர்வு கிடைக்கும். இந்தக் காலகட்டத்தில் செய்யும் முயற்சிகள் எதிர்காலத்தில் நல்ல வெற்றியைத் தரும். எனவே வரும் வாய்ப்புகளைத் கண்டிப்பாக பயன்படுத்திக் கொள்ளலாம்.