Jupiter Rise in Gemini Zodiac Sign : ஜோதிட சாஸ்திரத்தின் படி, செல்வம், ஞானத்திற்கு அதிபதியான குரு பகவான் வரும் ஜூலை 9ஆம் தேதி உதயமாகிறார். இது 5 ராசிகளுக்கு என்னென்ன பலனை தரும் என்று பார்க்கலாம்.

Jupiter Rise in Gemini Zodiac Sign : நவக்கிரகங்களில் மிக முக்கியமான கிரகம் குரு பகவான். செல்வ செழிப்புக்கு அதிபதி. ராஜவாழ்க்கை, பேரும், புகழையும் உருவாக்கிக் கொடுப்பார். அப்படிப்பட்ட குரு பகவான் கடந்த ஜூன் 9ஆம் தேதி அஸ்தமனம் ஆன நிலையில் ஜூலை 9 ஆம் தேதி காலை 4.44 மணிக்கு மீண்டும் உதயமாகிறார். அப்படி உதயமாகும் காலத்தில் குரு பகவானால், எந்தெந்த ராசிகளுக்கு என்னென்ன பலன் உண்டாகும் என்பது பற்றி பார்க்கலாம்.

குரு உதயத்தால் பலனடையும் ராசிகள்

ரிஷப (Taurus) ராசிக்கான குரு உதயம் பலன்

ரிஷப ராசிக்கு குரு உதயம் நன்மைகளைத் தரும். உத்தியோகத்தில் பாராட்டுகள் கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு. அரசு வேலை, பதவி உயர்வு எதிர்பார்ப்போருக்கு நல்ல நேரம் வந்துவிட்டது. வருமானம் அதிகரிக்கும். நிலுவையில் இருந்த பணிகள் வேகமாக நடந்து முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும்.

சிம்ம (Leo) ராசிக்கான குரு உதயம் பலன்

சிம்ம ராசிக்கு குரு உதயம் புதிய வெளிச்சம் தரும். தலைமைப் பண்புகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். கூட்டுத் தொழில் லாபகரமாகும். உத்தியோகத்தில் சாதகமான சூழல் நிலவும். வெளிநாட்டு பயணம், உயர்கல்வி சம்பந்தமாக நல்ல செய்திகள் வரும். பணவரவு உண்டு.

துலாம் (Libra) ராசிக்கான குரு உதயம் பலன்

துலாம் ராசிக்கு குரு உதயம் மிகவும் நன்மை பயக்கும். கல்வி, எழுத்து, சட்டத் துறையினருக்கு நல்ல பலன்கள் உண்டு. பேச்சாற்றலால் அனைவரையும் கவர்வீர்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உறவினர்களுடன் இருந்த பிரச்சனைகள் தீரும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். கிடப்பில் போடப்பட்ட பணம் உங்களுக்கு வந்து சேரும்.

மகர (Capricorn) ராசிக்கான குரு உதயம் பலன்

மகர ராசிக்கு குரு உதயத்தால் அதிர்ஷ்டம் கூடும். நிலுவையில் இருந்த திட்டங்கள் நிறைவேறும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். இவை எதிர்காலத்தில் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். சொத்து, வாகனம் வாங்க வாய்ப்புண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி, அமைதி நிலவும். கடன்கள் குறையும். வியாபாரம் லாபகரமாகும்.

மீன (Pisces) ராசிக்கான குரு உதயம் பலன்

மீன ராசிக்கு குருவின் பார்வை மிகவும் நன்மை பயக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். சில பிரச்சனைகளை தைரியமாக எதிர்கொள்வீர்கள். தொடங்கிய பணிகளில் வெற்றி கிடைக்கும். நிலுவையில் இருந்த பணிகள் விரைவில் முடியும். மாணவர்களுக்கு சாதகமான நேரம். பணவரவு உண்டு. ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். புனித யாத்திரை செல்ல வாய்ப்புண்டு. வாழ்க்கையில் அமைதி, சமநிலை கிடைக்கும்.