Today Rasi Palan : அக்டோபர் 02, 2025 தேதி தனுசு ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

பொதுவான பலன்கள்:

தனுசு ராசி நேயர்களே, இன்று நீங்கள் சில சவாலான சூழ்நிலைகளை சந்திக்க நேரிடலாம். இருப்பினும் உங்கள் சாதுரியத்தால் எதிர்வரும் தடைகள் அனைத்தையும் உடைத்து எறிவீர்கள். உங்கள் தன்னம்பிக்கை இன்று அபரிமிதமாக அதிகரிக்கும். வேலையில் சிறிது சுணக்கம் ஏற்பட்டாலும் கவனத்துடன் செயல்பட்டு அனைத்தையும் வெற்றிகரமாக முடித்துக் காட்டுவீர்கள்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நிதி நிலைமை:

வீட்டின் பராமரிப்பு அல்லது புனரமைப்பு பணிகளுக்காக பணம் செலவிட நேரிடலாம். இதன் காரணமாக செலவுகள் சற்று அதிகரிக்கக்கூடும். உங்கள் நெருங்கிய உறவினர்களுக்காகவும் பணம் செலவு செய்ய வேண்டிய சூழல் ஏற்படலாம். எனவே இன்று நிதி சார்ந்த விஷயங்களில் கவனத்துடன் இருப்பது நல்லது. அதிகப்படியான செலவுகள் செய்வதை தவிர்த்து விடுங்கள்.

தனிப்பட்ட வாழ்க்கை:

குடும்பத்தில் உள்ள பிரச்சனையை துணையுடன் பகிர்ந்து கொள்வீர்கள். இதன் காரணமாக உங்கள் மனதை அழுத்திக் கொண்டிருந்த கஷ்டங்கள் தீரும். துணையுடன் நெருக்கம் அதிகரிக்கும். துணையுடன் பேசும் பொழுது உணர்ச்சிவசப்படாமல், நிதானத்தை கடைபிடியுங்கள். கணவன் மனைவிக்கு இடையே அன்னோன்யம் மேலும் அதிகரிக்கும்.

பரிகாரங்கள்:

  • உங்கள் மனதில் ஏற்படும் கஷ்டங்களை நீக்குவதற்கு “ஓம் நமோ நாராயணாய:” மந்திரத்தை உச்சரியுங்கள்.
  • தட்சிணாமூர்த்தியை வழிபடுங்கள். 
  • குருபகவானுக்கு உகந்த மஞ்சள் நிறப் பொருட்களை தானமாக கொடுங்கள்.
  • ஆலயங்களில் இருக்கும் மரங்களுக்கு தண்ணீர் ஊற்றுங்கள்.

முக்கிய குறிப்பு:

இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.