Kumba Rasi This Week Rasi Palan: டிசம்பர் 15 முதல் 21 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் மகர ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த வார ராசிப்பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

வார ராசிப்பலன்கள் - கும்பம்

கும்ப ராசி நேயர்களே, இந்த வாரம் உங்கள் மனதில் இருந்த நீண்ட நாள் ஆசைகள் நிறைவேற்றுவதற்கான காலகட்டமாகும். உங்கள் முயற்சிகளுக்கு லாபம் கிடைக்கும். ஆரம்பத்தில் மன ரீதியான சலசலப்புகள் இருந்தாலும் வாரத்தில் நடுப்பகுதியில் நிலைமை சீரடையும். உங்கள் தனிப்பட்ட ஆளுமை மற்றும் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டி இருக்கலாம். தைரியம் மற்றும் முயற்சி காரணமாக பல விஷயங்களில் வெற்றி பெறுவீர்கள்.

நிதி நிலைமை:

லாப வீட்டில் கிரகங்களின் சஞ்சாரம் காரணமாக பல வழிகளில் இருந்தும் குறிப்பாக மூத்த சகோதரர்கள் அல்லது பிற வழிகளில் இருந்து பணவரவு கிடைக்கும் ராகு பகவானின் நிலையால் திடீர் செலவுகளும் வரலாம். நீண்ட கால முதலீடுகளை திட்டமிடுவதற்கு நல்ல நேரம் ஆகும். அபாயமான முதலீடுகள் அல்லது தேவையில்லாத விஷயங்களில் ரிஸ்க் எடுப்பதை தவிர்க்கவும்.

ஆரோக்கியம்:

சனி பகவான் சாதகமற்ற நிலையில் இருப்பதால் அதிக சோர்வு ஏற்படலாம். போதிய ஓய்வு அவசியம். செவ்வாய் பகவானின் நிலை காரணமாக மார்பு அல்லது ரத்த அழுத்தம் தொடர்பான பிரச்சனைகள் வரலாம். தியானம் மற்றும் உடற்பயிற்சி மூலம் மன அழுத்தத்தை குறைக்க வேண்டும். உணவுக் கட்டுப்பாடு அவசியம். ஆரோக்கியமற்ற உணவுகளைத் தவிர்க்கவும்.

கல்வி:

கல்வியில் நடுத்தரமான பலன்கள் கிடைக்கும். உங்கள் முயற்சிக்கு ஏற்ற வெற்றிகள் கிடைக்கும். ஆராய்ச்சி மற்றும் பிற துறைகள் தொடர்பான படிப்புகளில் இருக்கும் மாணவர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது அவசியம். நண்பர்களுடன் சேர்ந்து படிப்பது அல்லது குழுவாக படிப்பது நன்மை பயக்கும்.

தொழில் மற்றும் வியாபாரம்:

நண்பர்கள் அல்லது சமூக தொடர்புகள் மூலம் வேலை வாய்ப்புகளைப் பெறுவீர்கள். சுக்கிர பகவானின் நிலை காரணமாக பணியிடத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உள்ளது. வியாபாரத்தை விரிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகும். இருப்பினும் ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்கு முன்னர் அதிக கவனம் தேவை.

குடும்ப உறவுகள்:

ராகு பகவானின் நிலை காரணமாக குடும்ப உறுப்பினர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். எனவே வார்த்தைகளில் நிதானம் தேவை. செவ்வாய் பகவானின் நிலை காரணமாக தாயாரின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவைப்படலாம். குடும்பத்தில் பொதுவான புரிதலை மேம்படுத்த முயற்சிக்கவும். குரு பகவானின் நிலை காரணமாக சகோதரர்கள் வழியில் ஆதரவு கிடைக்கும்.

பரிகாரம்:

ஏழைகளுக்கு நல்லெண்ணெய் தானம் செய்வதன் மூலம் சனியின் தாக்கத்தை குறைக்க முடியும். ராகுவின் தாக்கத்தை குறைக்க ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வழிபடுவது நல்லது. முருகப்பெருமானை வழிபடுவதன் மூலம் செவ்வாய் பகவானின் தாக்கத்தை குறைக்கலாம். இயலாதவர்கள், ஏழை, எளியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)