Dhanusu Rasi This Week Rasi Palan: டிசம்பர் 15 முதல் 21 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் தனுசு ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த வார ராசிப்பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

வார ராசிப்பலன்கள் - தனுசு

தனுசு ராசி நேயர்களே, இந்த வாரம் தனுசு ராசியில் சூரியன் இருப்பதால் உங்கள் தன்னம்பிக்கை மற்றும் ஆற்றல் அதிகமாக இருக்கும். புதிய முயற்சிகளை தொடங்க உகந்த நேரம் ஆகும். புதன் பகவானின் நிலை காரணமாக பேச்சுத் திறன் கூர்மையாகும். விவாதங்கள் அல்லது சந்திப்புகளில் வெற்றி காண்பீர்கள். செவ்வாய் பகவானின் நிலை காரணமாக தேவையில்லாத செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே கட்டுப்பாடுடன் இருக்க வேண்டியது அவசியம்.

நிதி நிலைமை:

குரு பகவானின் வக்ர சஞ்சாரம் காரணமாக கடந்த கால முடிவுகள் மற்றும் முதலீடுகளைப் பற்றிய ஆழமாக சிந்திப்பீர்கள். சுக்கிர பகவான் தன ஸ்தானத்தில் இருப்பதால் பணவரவு சீராக இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் மூலம் நிதி ஆதாயம் கிடைக்கும். செவ்வாய் பகவான் நிலை காரணமாக மருத்துவச் செலவுகள் அல்லது தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். எனவே நிதி சார்ந்த விஷயங்களில் அவசர முடிவுகளைத் தவிர்க்கவும்.

ஆரோக்கியம்:

சூரிய பகவான் உங்கள் ராசியில் இருப்பதால் இந்த வாரம் முழுவதும் ஆரோக்கியமும், ஆற்றலும் நன்றாக இருக்கும். புதிய உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். தூக்கம் அல்லது கண் தொடர்பான பிரச்சனைகள் குறித்து கவனம் தேவை. அதிக வேலைப்பளு அல்லது மன அழுத்தத்தை தவிர்க்கவும். காரமான அல்லது வறுத்த உணவுகளை தவிர்த்து சீரான உணவு முறையை பின்பற்றுவது நல்லது.

கல்வி:

புதன் உங்கள் ராசியில் இருப்பதால் மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவார்கள். கடினமான பாடங்களை புரிந்து கொள்வது எளிதாகும். உயர்கல்விக்காக முயற்சிப்பவர்களுக்கு சாதகமான வாரமாகும். ராகுவின் தாக்கம் காரணமாக கவனச் சிதறல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தியானம் மற்றும் உடற்பயிற்சிகள் மூலம் மனதை ஒருநிலைப்படுத்தவும்

தொழில் மற்றும் வியாபாரம்:

பணியிடத்தில் உங்கள் முயற்சிகள் பாராட்டப்படும். உங்கள் கடின உழைப்புக்கான அங்கீகாரம் கிடைக்கும். உங்கள் தலைமைத்துவத்திறன் வெளிப்படும். சக ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுடன் தகவல் தொடர்பு சிறப்பாக இருக்கும். புதிய வணிக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சுயதொழில் செய்பவர்களுக்கு புதிய யுத்திகளை செயல்படுத்த சாதகமான நேரம். அனைத்து சவால்களையும் சமாளித்து வெற்றி பெறுவீர்கள்.

குடும்ப உறவுகள்:

சுக்கிர பகவானின் நிலை காரணமாக குடும்பத்தில் அமைதி நிலவும். மகிழ்ச்சி அதிகரிக்கும். உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கி, இணக்கம் உண்டாகும். உங்கள் பேச்சு மூலம் குடும்பப் பிரச்சினைகளை தீர்ப்பீர்கள். உங்கள் கருத்துக்கள் ஏற்கப்படும். குழந்தைகள் உங்கள் சொல் பேச்சை கேட்டு நடப்பார்கள். சனி பகவானின் நிலை காரணமாக சகோதரர்களுடனான உறவு உறுதி அடையும்.

பரிகாரம்:

தினமும் காலையில் சூரிய பகவானுக்கு நீர் படைத்து வழிபடுவது நல்லது. செவ்வாய் மற்றும் சனியன் தாக்கத்தை குறைக்க அனுமனை வழிபடலாம். புதன் பகவானின் ஆசியைப் பெற செடிகளை பராமரிப்பது அல்லது ஏழை குழந்தைகளுக்கு புத்தகங்கள் வழங்குவது நல்லது. முதியவர்கள் அல்லது மாற்றுத் திறனாளிகளுக்கு மருந்து பொருட்கள் வாங்க உதவிகளை செய்யலாம்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)