சிங்கப்பூரில் இனி செப்டம்பர் 25 முதல் திருமணத்தை இணைய வழி பதிவு செய்யலாம்!

By Dinesh TG  |  First Published Aug 16, 2023, 11:13 AM IST

சிங்கப்பூரில் மணமக்கள் அவர்களின் திருமணத்தை விரைவில் இணையம் வாயிலாக பதிவு செய்து கொள்ளும் முறையை அறிமுகப்படுத்த உள்ளது.
 


இதற்காக, சிங்கப்பூர் அரசு திருமணப் பதிவுத்துறையும், முஸ்லிம் திருமணப் பதிவுத் துறையும் இணைந்து அதற்கென 'Our Marriage Journey' எங்கள் திருமணப் பயணம் எனும் புதிய இணைய தளத்தை தொடங்கியுள்ளது.

இந்த இணையதளம் அடுத்த மாதம் செப்டம்பர் 25ம் தேதியில் இருந்து செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மணம்மகளும் தங்கள் திருமணத் தகவல்களை உரிய முறையில் சமர்பித்து திருமணத்தை பதிந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருமண விண்ணப்பம் முதல் திருமண பதிவுச் சான்றிதழ் வழங்குவது வரை அனைத்தும் இணைய வழி முறையில் மிகவும் எளிமைபடுத்தப்பட்டுள்ளன.
 

சிங்கப்பூர் வந்து இறங்கியதும் சொகுசு கார் வாங்கிய Pixie.. யாருனு தெரியுதா? காரின் விலை கேட்டால் தலைசுத்தும்!

Tap to resize

Latest Videos

உலகில் வாழத் தகுந்த நகரங்கள் டாப் 20ல் சிங்கப்பூர்! சென்னை, பெங்களூருக்கு எந்த இடம் தெரியுமா?

click me!