சிங்கப்பூர்.. Girl Friendஐ வழியனுப்ப 55 வயது நபர் செய்த பலே வேலை - லபக்கென்று பிடித்து கைது செய்த போலீசார்!

By Ansgar R  |  First Published Aug 15, 2023, 7:18 PM IST

சிங்கப்பூரில் இருந்து வேறு இடத்திற்கு செல்லும் நோக்கம் இல்லாமல், சாங்கி விமான நிலையத்தின் போக்குவரத்துப் பகுதிக்குள் நுழைய, போர்டிங் பாஸை தவறாகப் பயன்படுத்தியதற்காக 55 வயது நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் தற்போது கைது செய்யப்பட்டதாக சிங்கை போலீசார் இன்று ஆகஸ்ட் 15ம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.


கைது செய்யப்பட்டுள்ள அந்த நபர் போர்டிங் பாஸைப் பெறுவதற்காக, ஒரு விமானப் பயணச்சீட்டை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் நாட்டை விட்டுச் செல்லும் தனது காதலியை வழி அனுப்புவதற்காக சாங்கி விமானநிலைய போக்குவரத்துப் பகுதிக்குள் அவர் பிரவேசித்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விமான நிலையத்தில் உள்ள பாதுகாக்கப்பட்ட இடங்களுக்குள் நுழைய போர்டிங் பாஸ்களை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் உள்கட்டமைப்பு பாதுகாப்புச் சட்டம் 2017ஐ மீறியதற்காக அந்த நபர் கடந்த சனிக்கிழமை அன்று கைது செய்யப்பட்டார், இதுகுறித்த அடுத்தகட்ட விசாரணைகள் நடந்து வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Tap to resize

Latest Videos

“மெய்சிலிர்க்கும் தருணம்” புர்ஜ் கலிஃபாவில் ஜொலித்த இந்திய மூவர்ண கொடி.. வைரல் வீடியோ..

மேலும் இந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை, சிங்கப்பூரில் இருந்து வெளியூர் செல்வதைத் தவிர வேறு காரணங்களுக்காக போக்குவரத்துப் பகுதிகளுக்குள் நுழைய, தங்களது போர்டிங் பாஸை தவறாகப் பயன்படுத்தியதற்காக மொத்தம் 16 பேரை கைது செய்துள்ளதாக போலீஸார் மேலும் தெரிவித்தனர்."சாங்கி விமான நிலையத்தின் போக்குவரத்துப் பகுதிகள், பாதுகாக்கப்பட்ட இடங்களாக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன என்பதை காவல்துறை பொதுமக்களுக்கு நினைவூட்ட விரும்புகிறது" என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். 

சிங்கப்பூரில் இருந்து வெளியே செல்வதைத் தவிர வேறு காரணங்களுக்காக போக்குவரத்துப் பகுதிக்குள் நுழைய போர்டிங் பாஸைப் பயன்படுத்துபவர்கள் கண்டறியப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என்றும் காவல்துறை மேலும் கூறியது. அவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் S$20,000 (12 லட்சம் ரூபாய்) வரை அபராதம், இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

வடக்கு மியான்மரில் பயங்கர நிலச்சரிவு.. தோண்டும் இடமெல்லாம் மனித உடல்கள் - அதிர்ச்சியில் மீட்புக்குழு!

click me!