இந்தியாவின் சுதந்திர தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு பிரான்ஸ், ஈரான், இலங்கை மற்றும் பூடான் உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்கள் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு உலகெங்கிலும் உள்ள தலைவர்கள் இந்தியக் குடிமக்களுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இந்தியாவின் சுதந்திர தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் முதல் ஈரான், இலங்கை மற்றும் பூடான் உள்ளிட்ட பல நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் வரை தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
சுதந்திர தின வாழ்த்து கூறியுள்ள அமெரிக்க வெளியுறவுத் துறை, இரு நாடுகளும் இணைந்து அனைவருக்கும் மிகவும் நம்பிக்கைக்குரிய எதிர்காலத்தை உருவாக்க முயற்சிப்பதாகத் தெரிவித்திருக்கிறது.
"சுதந்திர தின வாழ்த்துகள், இந்தியா! இந்திய மக்களின் கொண்டாட்டத்தில் இணைகிறோம். இந்தத் தருணம் நமது நாடுகளுக்கு இடையேயான வலுவான நட்பை பிரதிபலிக்கிறது. அரசியலமைப்பில் உள்ள மேன்மையான இலட்சியங்களை நாங்களும் எதிரொலிக்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளது.
வீடுதோறும் பறக்கும் மூவர்ணக் கொடி! இணையத்தில் இதுவரை 88 மில்லியன் செல்ஃபிகள் பதிவு!
स्वतंत्रता दिवस पर भारतवासियों को हार्दिक बधाई।
एक महीने पहले पेरिस में, मेरे मित्र और मैंने भारत की स्वतंत्रता के शताब्दी वर्ष, 2047 तक नई भारत-फ्रांस महत्वाकांक्षाएं निर्धारित कीं। भारत एक विश्वसनीय मित्र और भागीदार के रूप में फ्रांस पर भरोसा कर सकता है, हमेशा। https://t.co/TN7Y5CqKd2
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், அந்நாட்டின் தலைமை விருந்தினராக பிரதமர் மோடியின் வருகை தந்ததை நினைவுகூரும் வகையில் பிரதமர் மோடியை சந்தித்த வீடியோவைப் பகிர்ந்து இந்தியில் பதிவிட்டுள்ளார். பாரீஸ் மற்றும் புது தில்லி இடையே நிலவும் நீடித்த மற்றும் இணக்கமான உறவுகளைக் காட்டும் வகையில், பிரான்ஸ் தொடர்ந்து இந்தியாவுக்கு நம்பிக்கைக்குரிய கூட்டாளியாக இருக்கும் என்று உறுதி கூறியுள்ளார்.
இந்த சுதந்திர தினத்தில் நேபாளம் மற்றும் பூட்டான் தலைவர்களும் இந்திய மக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹல் பிரசண்டா தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்தியாவின் 77வது சுதந்திர தினத்தின் புனிதமான தருணத்தில், பிரதமர் நரேந்திர மோடி ஜி மற்றும் நட்பார்ந்த இந்திய மக்கள் தொடர்ந்து அமைதி, முன்னேற்றம் மற்றும் செழிப்புடன் இருக்க அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
I join my friends from India in celebrating the remarkable journey of their nation today. pic.twitter.com/gnfjgVGulm
— PM Bhutan (@PMBhutan)பூடான் பிரதமர் லோடே ஷெரிங்கும் இந்தியாவின் சுதந்திர தினக் கொண்டாடுவதில் இணைந்துள்ளார். "இந்தியாவில் உள்ள எனது நண்பர்களுடன் இணைந்து நானும் இன்று அவர்கள் தேசத்தின் குறிப்பிடத்தக்க பயணத்தைக் கொண்டாடுகிறேன்" என்று ஷெரிங் குறிப்பிட்டுள்ளார்.
மாலத்தீவு பிரதமர் இப்ராஹிம் சோலியும் சுதந்திர தினத்தை முன்னிட்டு தனது மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டிருக்கிறார். இந்த சுதந்திர தினத்தில் இந்திய மக்களுக்கு தனது நல்வாழ்த்துக்களைக் கூறிக்கொள்வதாக சோலி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் 3D பேச்சு! சுதந்திர தின உரையை புகழ்ந்து தள்ளிய பிரபலங்கள்!