நாட்டின் சுதந்திர தினத்தன்று உலகின் உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலிஃபா இந்தியாவின் மூவர்ண கொடியால் ஜொலித்தது.
இந்தியாவின் 77-வது சுதந்திர தினத்தை யொட்டி, துபாயில் உள்ள புர்ஜ் கலீஃபா, இந்தியாவின் மூவர்ணக் கொடியில் ஜொலித்தது. இந்திய தேசிய கீதமான ‘ஜன கண மன’ பின்னணியில் இசைக்கப்படுவதால், உலகின் மிக உயரமான கட்டிடம் இந்திய தேசிய கொடியால் ஒளிர்கிறது. இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. ‘Mufaddal Vohra’ என்ற X சமூகவலைதள பயனர் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். மேலும் அவரின் பதிவில் “புர்ஜ் கலிஃபாவில் தேசிய கீதத்துடன் இந்தியக் கொடி மிளிர்கிறது. மெய்சிலிர்க்க வைக்கும் தருணம்!" என்று பதிவிட்டுள்ளார்
Indian flag at the Burj Khalifa with the national anthem.
A goosebumps moment! 🇮🇳 pic.twitter.com/K6sxXODZhI
undefined
முன்னதாக துபாயில் பாகிஸ்தானி மக்கள் சலசலப்பை ஏற்படுத்திய ஒரு நாளுக்கு பிறகு இந்த வீடியோ வைரலாகி வருகிறது. புர்ஜ் கலீஃபாவில் பாகிஸ்தான் கொடி காட்டப்படாததால், நூற்றுக்கணக்கான பாகிஸ்தானியர்கள் கோபமடைந்தனர். இதுதொடர்பான வீடியோ நேற்று வைரலானது. நள்ளிரவில் புர்ஜ் கலிஃபாவிற்கு அருகில் தங்கள் தேசியக் கொடியின் வண்ணங்கள் ஒளிரும் என்று எதிர்ப்பார்த்து, பாகிஸ்தான் நாட்டு மக்கள் பெரும் கூட்டமாக காத்திருப்பதை வீடியோ காட்டுகிறது.
இருப்பினும், புர்ஜ் கலீஃபாவில் பாகிஸ்தான் கொடி காட்டப்பட்டது. என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும், இதுதொடர்பான வீடியோ இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களில் பகிரப்பட்டது. “பாகிஸ்தானின் இஸ்லாமிய குடியரசின் சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் #BurjKhalifa ஒளிர்கிறது. உங்கள் மகத்தான தேசத்தின் வளமான பாரம்பரியம் மற்றும் சாதனைகளை நீங்கள் கொண்டாடும் பாகிஸ்தான் மக்களுக்கு பெருமை, ஒற்றுமை மற்றும் செழிப்பு ஆகியவற்றால் நிரப்பப்பட்ட நாளாக வாழ்த்துகிறேன். எதிர்காலம் அனைத்து பாகிஸ்தானியர்களுக்கும் இன்னும் பெரிய வெற்றியையும் மகிழ்ச்சியையும் அளிக்கட்டும். சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!" என்று அந்த பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கிடையில், இந்தியாவின் 77வது சுதந்திர தினத்தையொட்டி செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். நாட்டு மக்களை குடும்ப உறுப்பினர்கள் என்று அழைத்து பிரதமர் மோடி தனது உரையை தொடங்கினார். ஊழல், குடும்ப ஆட்சி, சமாதான கொள்கை ஆகியவை இந்தியாவுக்கு முக்கிய தடைகள் என்றும் இந்த மூன்று தீமைகளுக்கு எதிராக முழு சக்தியுடன் போராட வேண்டும் என்றும் மோடி கூறினார்.
மேலும் “ சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றம் ஆகியவை நாட்டை மாற்றும் தாரக மந்திரங்கள். 2014ல் நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது, உலகப் பொருளாதார அமைப்பில் இந்தியா 10வது இடத்தில் இருந்தது. இன்று, 140 கோடி இந்தியர்களின் முயற்சியால், 5வது இடத்திற்கு வந்துவிட்டோம், ஊழல் என்ற அரக்கனை நாட்டை விட்டு வெளியேற்றி, வலுவான பொருளாதாரத்தை உருவாக்கினோம். பாரம்பரிய திறன் கொண்டவர்களுக்கு அடுத்த மாதத்தில் 13,000 முதல் 15,000 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் விஸ்வகர்மா திட்டத்தை அரசாங்கம் தொடங்கும்.2047ல் இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் போது, அது வளர்ந்த நாடாக மாறும் என்று நான் நம்புகிறேன்.” என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.