92 வயசானும் அசராத மர்டோக்! லெஸ்ஸியை கழற்றிவிட்டதும் அடுத்த பெண்ணுடன் டேட்டிங் உல்லாசம்!

By SG Balan  |  First Published Aug 15, 2023, 8:26 PM IST

92 வயதான ரூபர்ட் மர்டோக், தன் முன்னாள் காதலி ஆன் லெஸ்லி ஸ்மித்தைப் பிரிந்த சில மாதங்களில் எலெனா ஜுகோவாவுடன் டேட்டிங் செய்துவருகிறார்.


92 வயதான ஊடக நிறுவனத் தலைவரான ரூபர்ட் மர்டோக், ஆன் லெஸ்லி ஸ்மித்துடனான தனது நிச்சயதார்த்தத்தை திடீரென நிறுத்தினார். அடுத்த சில மாதங்களில் அவர் ஓய்வுபெற்ற விஞ்ஞானியான எலெனா ஜுகோவாவுடன் டேட்டிங் செய்துவருவதாக வதந்தி பரவுகிறது.

ரூபர்ட் மர்டோக் - எலெனா ஜுகோவா இருவரும் ஜோடியாக போட் ஹவுசில் விடுமுறையை அனுபவித்துக்கொண்டிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. ரூபர்ட் முர்டோக்கின் மூன்றாவது மனைவி வெண்டி டெங் மூலம் ஒருவருக்கொருவர் அறிமுகமானார்கள் என்று கூறப்படுகிறது.

Tap to resize

Latest Videos

இனி திருப்பதி செல்லும் பக்தர்கள் கையில் கம்புடன் தான் போகவேண்டுமாம்!

66 வயதான எலெனா ஜுகோவா ஒரு மூலக்கூறு உயிரியல் விஞ்ஞானியாக பணியில் இருந்து ஓய்வு பெற்றார். ஓய்வு பெறுவதற்கு முன்பு லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மருத்துவ ஆராய்ச்சி பிரிவில் பணிபுரிந்தார். இவரது மகள் கலை சேகரிப்பாளரும் சமூக செயல்பாட்டாளருமான தாஷா ஜுகோவா. தாஷா, 2008 முதல் 2017 வரை செல்சியா கால்பந்தாட்ட கிளப்பின் உரிமையாளராக இருந்த ரோமன் அப்ரமோவிச்.

ஆன் லெஸ்லி ஸ்மித்துடனான திருமணத்தை நிறுத்திய சில மாதங்களுக்குப் பிறகு மர்டோக் - எலெனா இடையேயான உறவு பற்றிய தகவல் வந்துள்ளது. மர்டோக் ஆன் லெஸ்ஸியுடனான கருத்து வேறுபாடு காரணமாக திருமண முடிவில் இருந்து பின்வாங்கினார் என்று சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதெல்லாம் வெளிநாட்டு கம்பெனின்னு நெனைச்சீங்களா! ஆச்சரியப்பட வைக்கும் 10 இந்திய நிறுவனங்கள்!

அவரது நான்காவது மனைவியாக இருந்த மாடலும் நடிகையுமான ஜெர்ரி ஹாலிடம் இருந்து விவாகரத்து பெற்றபின், ஒரு வருடம் கழித்து லெஸ்ஸியுடன் மர்டோக்கின் திருமணம் திட்டமிடப்பட்டது. முதல் மூன்று திருமணங்களில் மர்டோக்கிற்கு ஆறு வாரிசுகள் உள்ளனர். பாட்ரிசியா புக்கருடன் 1956 முதல் 1967 வரை, அன்னா மரியா டோர்வ் உடன் 1967 முதல் 1999 வரை, வெண்டி டெங்குடன் 1999 முதல் 2013 வரை திருமண உறவில் இருந்தார்.

போர்ப்ஸ் தகவலின்படி, நியூஸ் கார்ப் (News Corp.) குழுமத்தின் தலைவரான ரூபர்ட் மர்டோக் சுமார் 17 பில்லியன் டாலர் சொத்து வைத்திருக்கிறார். ஃபாக்ஸ் நியூஸ், வால் ஸ்ட்ரீட் ஜர்னல், தி நியூயார்க் போஸ்ட் உள்ளிட்ட பல பிரபலமான ஊடக நிறுவனங்கள் இவருக்குச் சொந்தமானவை.

முதல் முறையாக அமீரக கச்சா எண்ணெய்க்கு ரூபாயில் பேமெண்ட் செய்த இந்தியா!

click me!