அவ்வையார் பாடிய விநாயகர் துதி பாடலை, பாடி அசத்தி இருக்கும் குட்டி குழந்தை; வைரல் வீடியோ...

Sep 27, 2018, 3:51 PM IST

மொழிகளிலெல்லாம் மிகவும் இனிமையானது நமது தாய் மொழியான தமிழ் மொழி. அந்த தமிழ் மொழியை யார் பேசினாலும் அழகு தான். அதிலும் பிஞ்சுக்குழந்தைகள் பேசும் மழலை தமிழுக்கு நிகரான இனிமை வேறு எந்த இசையிலும் கூட கிடையாது. இதனை தான் வள்ளுவர் அப்போதே  ”குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர்.” என்று கூறி இருக்கிறார். 

அந்த அளவிற்கு இனிமையானது மழலைச்சொல். அந்த மழலை மொழியில் ஒரு சின்ன குழந்தை அவ்வையார் விநாயகருக்கு எழுதிய விநாயகர் துதி பாடலான ”பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன் கோலம் செய் துங்க கரிமுகத்து தூமணியே நீ எனக்கு சங்க தமிழ் மூன்றும் தா!” எனும் பாடலை பாடி இருக்கும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.

இன்றைய தலைமுறையினர் பலரும் தங்கள் குழந்தைகளுக்கு ஆங்கிலத்தில் ரைம்ஸ் சொல்லி தருவதையே பெருமை என கருதும் இந்த காலத்தில் , அவ்வையார் பாடிய இந்த பக்தி பாடலை இந்த சின்னஞ்சிறு குழந்தைக்கு கற்றுக் கொடுத்திருக்கின்றனர் அதன் பெற்றோர். 

அதனை கற்பூரம் போல பிடித்துக்கொண்ட இந்த பிஞ்சுக்குழந்தையும் ,அழகாக தன் மழலை மொழியில் இந்த தமிழ் பாடலை பாடி இருக்கும் வீடியோ அனைத்து தரப்பினர் மனதையும் கவர்வதாக அமைந்திருக்கிறது. அதிலும் சுட்டித்தனமான பாவங்களுடன் இந்த பாடலை பாடி முடித்த பிறகு , இந்த சுட்டிக்குழந்தை வணக்கம் சொல்லும் விதம் அழகோ அழகு தான்.