கார்த்தியுடன் ஜாலியாக பிறந்தநாள் கொண்டாடிய ரகுல் பரீத்!! வீடியோ...

Oct 6, 2018, 1:11 PM IST

ரஜத் ரவி சங்கர் இயக்கத்தில் கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் இரண்டாவது முறையாக இணைந்து நடிக்கும் படம் ‘தேவ்’. சென்னை, ஹைதராபாத், உக்ரைன் உள்ளிட்ட இடங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது.   தற்போது படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ரகுல் ப்ரீத் சிங்கின் காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டுள்ளன.

முக்கிய நடிகர்கள், நடிகைகள் படப்பிடிப்பை முடித்தால் படக்குழு கேக் வெட்டிக் கொண்டாடி அவர்களை வழியனுப்பி வைப்பது சமீபகாலமாக தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. அதோடு வரும் அக்டோபர் 10ஆம் தேதி ரகுல் பிறந்தநாள் வருவதால் முன்கூட்டியே அதையும் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இதை ரகுல் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வீடியோவுடன் வெளியிட்டுள்ளார்.