நித்யானந்தாவை கலாய்த்து பிரியா பவானி சங்கர் செய்திருக்கும் டப் ஸ்மாஷ்; வைரல் வீடியோ;

Sep 24, 2018, 12:44 PM IST

சின்னத்திரையில் மக்கள் மனதை கவர்ந்த சீரியல் நடிகையாக இருந்த பிரியா பவானி சங்கர் , “மேயாத மான்” திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கதாநாயகியாக வெற்றி வாகை சூடினார். தொடந்து கடைக்குட்டி சிங்கம்  போன்ற திரைப்படங்களில் கூட இவர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார். 

நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து அதில் மட்டுமே நடிப்பேன் என்பதில் உறுதியாக இருக்கும் பிரியா பவானி சங்கர் சமீபகாலமாக எந்த திரைப்படத்திலும் கமிட் ஆகவில்லை.இந்நிலையில் அவர் நித்யானந்தாவை கலாய்த்து டப்ஸ்மாஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இந்த டப் ஸ்மாஷ் வீடியோ இப்போது வைரல் ஆகி இருக்கிறது. 

இதில் நித்யானந்தா பேசிய மிக பிரபலமான ஒரு டயலாக் ஒன்றை பிரியா டப் ஸ்மாஷ் செய்திருக்கிறார். பார்ப்பதற்கு காமெடியாக இருக்கும் இந்த டப்ஸ்மாஷை பலர் பாராட்டி இருந்தாலும், பிரியாவிடம் வேறு படங்கள் எதுவும் இல்லை அதனால் தான் இவர் இப்படி தேவையில்லாத வேலைகளை செய்து வருகிறார் சென்று விமர்சிக்கவும் செய்திருக்கின்றனர்.

”இந்த பிரபஞ்சத்திற்கே என்னை பின்பற்றுவதை தவிர வேறு எந்த வழியும் கிடையாது”  என நித்யானந்தா தனது சிஷ்ய கோடிகளுக்கு உபதேசம் வழங்குவதை ,பிரியா பவானி சங்கர் கேலி செய்திருப்பது போல இந்த வீடியோ அமைந்திருப்பதால் தான், இப்படி நேர்மறை மற்றும் எதிர்மறை விமர்சனங்களுக்கு ஒரே சமயத்தில் ஆளாகி இருக்கிறார் பிரியா பவானி சங்கர்.