நடிகர் விஜய்க்கு மறைந்த அன்பு தங்கையின் பிறந்தநாள் வாழ்த்து.. ஓவியருக்கு குவியும் பாராட்டுக்கள்!

Jun 23, 2024, 11:36 AM IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டையைச் சேர்ந்த பிரபல ஓவியர் சு. செல்வம் அவர்கள் நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து வித்தியாசமான முறையில் கூறும் விதமாக விஜய்க்கு தங்கச்சி என்றால் உயிர், துருதுருவென்று இருந்த விஜய் இப்ப அமைதிக்கு காரணம் சிறு வயதிலேயே தன் அன்பு தங்கச்சி வித்யா மரணம், விஜய்யின் அன்பு "தங்கை போட்டோவாலேயே" நடிகர் விஜய் படத்தை ஓவியர் செல்வம் வரைந்தார்.

தங்கை வித்யா பற்றி ஒரு நிகழ்ச்சியில் பேசிய விஜய், எனது வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்திய விஷயம் என்னவென்றால், அது என் தங்கை வித்தியாவின் உயிரிழப்பு தான், அதில் இருந்து மீள்வது கடினம் ஆனால் ஒன்று எனது தங்கத்தை நாங்கள் புதைக்கவில்லை, விதைத்திருக்கிறோம், அதனால்தான் எனக்கு இவ்வளவு தங்கைகள் இருக்கிறார்கள் என்று கூறியது கவனிக்கத்தக்கது.

தங்கச்சி மீது பாசம் கொண்ட விஜய்யின் பிறந்தநாளுக்கு, அவருடைய தங்கச்சியே பிறந்தநாள் வாழ்த்து கூறும் விதமாக, ஓவியர் செல்வம் அவர்கள் விஜய் அவருடைய அன்பு தங்கை போட்டோவை நீர்வண்ணத்தில் தொட்டு நடிகர் விஜய் படத்தை "தங்கை போட்டோவாலேயே" ஐந்து நிமிடங்களில் ஓவியர் செல்வம் வரைந்தார். இந்த ஓவியத்தை பார்த்த பொதுமக்கள், ரசிகர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர். ஓவியர் செல்வம் அவர்களை வாழ்த்தினார்கள்.