திமுக மகளிர் அணியின் சமத்துவ பொங்கல்... 100க்கும் மேற்பட்ட மண் பானைகளில் பொங்கல் வைத்து கொண்டாட்டம்!!

Jan 15, 2023, 6:28 PM IST

கோவை சிங்காநல்லூரில் திமுக மகளின் அணியினர் 100க்கும் மேற்பட்ட மண் பானைகளில் சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினர். பொங்கல் பண்டியையொட்டி தமிழகம் முழுவதும் மக்கள் அனைவரும் பொங்கல் வைத்து பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.  இந்த நிலையில் கோவை மாவட்டம் சிங்காநல்லூரில் ஆண்டுதோறும் சமத்துவ பொங்கல் கொண்டாடப்படுவது வழக்கம்.

இதையும் படிங்க: தமிழ்நாடு வாழ்க என்று முழக்கமிட்டு சட்டமன்ற உறுப்பினர் ஷாநவாஸ் பொங்கல் கொண்டாட்டம்!

அந்த வகையில் இந்த ஆண்டு சிங்காநல்லூரில், கலை இலக்கிய அணி மாநில துணைச்செயலாளர் மீனா ஜெயக்குமார், பகுதி கழக செயலாளர் எஸ்.எம்.சாமி தலைமையில், சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. இதில் திமுக மகளின் அணியினர் 100க்கும் மேற்பட்ட மண் பானைகளில் சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினர்.

இதையும் படிங்க: சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாரம்பரிய முறையில் கொண்டாடப்பட்ட பொங்கல் விழா!

இந்த சமத்துவ பொங்கலில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு பொங்கலோ பொங்கல் என முழக்கமிட்டு தை பொங்கலை கோலகலாமாக கொண்டாடினர். இந்த சமத்துவ பொங்கல் விழாவில், ரவிச்சந்திரன், வெங்கடேசன் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.