நீலகிரியில் கேரட்டுக்கு நல்ல லாபம் விவசாயிகள் மகிழ்ச்சி

Sep 28, 2022, 3:49 PM IST

நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தப்படியாக கேரட், பீட்ரூட், முள்ளங்கி உள்ளிட்ட பொருட்கள் விளைவிக்கப்படுகின்றன. இந்நிலையில் கடந்த சில தினங்களாக கிலோ ரூ.30க்கு விற்கப்பட்டு வந்த கேரட், தற்போது கிலோ ரூ.105 வரை விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.