"யோகிபாபுவை திருமணம் செய்ய போகிற பொண்ணு நான்தான்" முற்றுப்புள்ளி வைத்து வீடியோ வெளியிட்ட சக நடிகை..!

Nov 26, 2019, 12:12 PM IST

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத காமெடி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் யோகிபாபு. கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவுடன் டூயட் பாடிய பிறகு யோகிபாபுவிற்கு அடித்தது யோகம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தல, தளபதி என முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். மேலும் கதிருடன் ஜடா, சிவகார்த்திகேயன் உடன் ஹீரோ ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். 

நடிகர் யோகிபாபுவிற்கு திருமணம் நடந்துவிட்டதாகவும், அவரது வாழ்க்கை துணைவி இதுதான் என்பது போன்ற புகைப்படமும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. எனக்கு தெரியாமா எப்ப, எனக்கு கல்யாணம் ஆச்சின்னு பதறிப்போன யோகிபாபு. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தில் யோகிபாபுவுடன் இருந்த நடிகை சபிதா ராய் இந்த வதந்தி பற்ற வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். நான்தான் யோகிபாபுவை திருமணம் செய்ய போகிற பொண்ணு என்ற இந்த செய்தி வதந்தி என கூறியுள்ள அவர் அந்த புகைப்படம் கன்னிராசி என்ற படத்தின் ஷூட்டிங்கில் எடுத்து என்றும் யோகிபாபு எனக்கும் சக நடிகை என்பதைத் தாண்டி எனக்கும் அவருக்கும் எந்தவித சம்மந்தமில்லை  நல்ல மனிதர் மற்றும் எனக்கு நல்ல நண்பர் அவ்வளவுதான் தெரிவித்துள்ளார்.