அதிமுக-பாஜககூட்டணி மீண்டும் அமையுமா?டெல்லியில் அமித் ஷாவுடன் பேசியது என்ன?-எடப்பாடிபழனிசாமி

Published : Mar 26, 2025, 05:00 PM IST

டெல்லி சென்றுள்ள தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை செவ்வாய்க் கிழமையன்று சந்தித்துப் பேசினார். டெல்லியிலிருந்து தமிழ்நாடு புறப்படும் முன்னதாக விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.அப்போது அமித் ஷாவுடன் அரசியல் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி," தேர்தலுக்கு இன்னமும் ஓராண்டுக்கு மேல் உள்ளது. எல்லோருமே தேர்தல் நெருங்கும் நேரத்தில் கூட்டணி அமைப்பார்கள். கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு. எங்களின் கொள்கை என்றுமே நிலையானது. கூட்டணி என்பது சந்தர்ப்ப சூழ்நிலைக்கு தகுந்தவாறு மாறும். " என்றார். திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அதே கூட்டணியில் இருக்கப் போகிறதா? என கேள்வி எழுப்பிய அவர், மக்களுடைய பிரச்சனைகளை முன்வைத்து அதனை தீர்ப்பதில் முனைப்பாக இருக்கும் கட்சியே அதிமுக எனக் கூறினார்.

05:26விஜய் NDA கூட்டணிக்கு சென்றால் இந்தியா கூட்டணி கூடுதல் தொகுதிகளை வெல்லும் - செல்வப்பெருந்தகை பேட்டி
04:18மொத்தமும் மாறப்போகுது.! தமிழக அரசியலின் பிக்பாஷ் கிளைமாக்ஸ்! முதல்வர் பதவி: தியாகமா? வியூகமா?
03:19திமுக கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைக்கும்
03:06இந்த மக்கள் விரோத திமுக ஆட்சியை வீழ்த்துவதே தங்களது முதன்மை இலக்கு - கொந்தளித்த குஷ்பு
03:12என்டிஏ கூட்டணியில் தவெக? ராமதாஸ் அணியிடம் பேச்சுவார்த்தை... சி.டி.ஆர்.நிர்மல்குமார் பரபரப்பு
04:27விஜய் அரசியலுக்கு வந்தது முதலமைச்சர் ஆக !...துணை முதல்வர் பதவிக்கு இல்லை ! செங்கோட்டையன் பேட்டி
02:42விஜயை முதல்வராக ஏற்றுக் கொள்கிறவர்கள் கூட தான் கூட்டணி ! தவெக செங்கோட்டையன் பேச்சு
03:15அமலுக்கு வந்த தேர்தல் விதிகள்.. ரூ.50000 வரை மட்டுமே அனுமதி..! இவ்வளவு கண்டிஷன் இருக்கா..?
03:01முதல் வருடம் விஜய் முதலமைச்சர்.! 5 ஆண்டுக்கு 5 சி.எம்.! ஆட்சியை பிடிக்க ஆபர்களை அள்ளி வீசும் அமித்ஷா
03:14சிபிஐ அலுவலகத்தில் இருந்து சிரித்த முகத்துடன் வெளியே வந்த தளபதி விஜய்...
Read more