Jul 9, 2024, 3:55 PM IST
வழக்கறிஞரும், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவருமான ஆம்ஸ்ட்ராங் கடந்த வெள்ளிக் கிழமை இரவு சென்னை பெரம்பூர் பகுதியில் தனது வீட்டின் அருகிலேயே கூலிப்படையினரால் வெட்டி கொல்லப்பட்டார். ஆம்ஸ்ட்ராங்கின் மரண செய்தி கேட்டு முதல் நபராக ஓடி வந்த இயக்குநர் பா.ரஞ்சித் இறுதிச் சடங்குகள் நடைபெறும் வரை அருகிலேயே இருந்து அனைத்து பணிகளையும் பார்த்துக் கொண்டார்.
இதனிடையே புரட்சியாளர் அம்பேத்கரின் கொள்கைகளில் மிகவும் பிடிப்போது இருந்த ஆம்ஸ்ட்ராங்கை போலவே இயக்குநர் பா.ரஞ்சித்தும் அம்பேத்கரின் கொள்கைகளில் மிகுந்த பிடிப்போடு காணப்படுவார். இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் அடுத்தத் தலைவரும், ஆம்ஸ்ட்ராங்கை போலவே துடிப்போடு செயல்படும் வகையில் இருக்க வேண்டும் என கட்சியின் தலைமை விரும்புவதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் பெரும்பாலும் அறியப்பட்ட முகமாகவும், அம்பேத்கரின் கொள்கைகளில் மிகவும் பிடிப்போடும் இருக்கும் இயக்குநர் பா.ரஞ்சித்தை அடுத்த மாநிலத் தலைவராக பணியமர்த்தலாம் என நிர்வாகிகள் பலரும் கருத்து தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.