
விஜய்யின் வருகை இளைஞர்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இளைஞர்கள் - பெண்கள் மத்தியில் அதிக செல்வாக்கு உள்ளது. மக்கள் பிரச்சினைகளை கையில் எடுத்தால் இன்னும் பெரிய அளவில் மக்களை ஈர்க்க முடியும். என்னுடைய நிலைப்பாடு மக்கள் பிரச்சனைக்கு குரல் கொடுக்கக்கூடியது. மக்கள் பிரச்னைகளை தீர்க்கக்கூடிய ஆளாக நான் இருப்பேன். எந்தக் கட்சியில் இணையப் போகிறேன் என்பதை நானே தெரிவிப்பேன். ஒரு கட்சியில் இணைப் போகிறேன் என்றால், எதற்காக அந்தக் கட்சியில் இணையப் போகிறேன் என்பது குறித்து முழுவிவரத்தையும் தெரிவித்து தான் இணைவேன் என அவர் தெரிவித்தார்.