வைகாசி திருவிழா கொடி ஏற்றத்துடன் துவங்கியது ....ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்

வைகாசி திருவிழா கொடி ஏற்றத்துடன் துவங்கியது ....ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்

Published : Jun 04, 2025, 11:02 AM IST

முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி தண்டாயுதபாணி சுவாமிகோயிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் வைகாசி விசாகம் திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தஆண்டு வைகாசி விசாக திருவிழா இன்று பழனி பெரியநாயகிஅம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. பத்து நாள் நடைபெறும் திருவிழாவில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வள்ளிதெய்வானை முத்துக்குமாரசுவாமி திருக்கல்யாணம் வைபோகநிகழ்ச்சி வருகிற ஜூன் எட்டாம் தேதி நடைபெறும் அதனை தொடர்ந்து ஜூன் ஒன்பதாம் தேதி வைகாசி விசாக தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெறும் இதில். அலங்கரிக்கப்பட்ட திருதேரில் எழுந்தருளிய வள்ளி,தெய்வானையுடன் எழுந்தருளிய முத்துக்குமாரசுவாமி நான்கு ரத வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். இந்தக் கொடியேற்ற நிகழ்ச்சியில் கொடிக்கு பன்னீர், சந்தனம்,விபூதி உள்ளிட்ட பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெற்றன.இந்நிகழ்வில் இணை ஆணையர் மாரிமுத்து ,அறங்காவலர் குழுவினர் ,உள்ளூர் பிரமுகர்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்

89:40BJP Meeting | தமிழகத்திற்கு ₹5,650 கோடி ஜாக்பாட்! திருச்சியில் மோடியின் மெகா அதிரடி!
04:00"பொய் சொல்லி ஆட்சியை பிடித்தது திமுக.! வெளுத்து வாங்கிய எடப்பாடி பழனிச்சாமி
02:15மக்களை ஏமாற்றிவிட்டது திமுக.! திருச்சியில் கொந்தளித்த அன்புமணி ராமதாஸ்.
04:19தமிழ்நாட்டில் இனி மண் சாலைகளே இருக்காது.! தாறுமாறா மாறப்போகும் கிராமத்து ரோடுகள்.! PM மோடி பேச்சு
03:37தமிழ்நாட்டில் புதிதாக 5 ரயில் சேவைகள் துவக்கம்...அடிக்கடி ஊருக்கு போகலாம் ! PM மோடி பேச்சு
05:53குடும்பங்களக்கு ரூ.3700 கோடி மதிப்பிலான திட்டம் ... இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ! PM மோடி பேச்சு
03:12BJP Meeting | திருச்சியில் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தின் ஏற்பாடுகள் ! ட்ரோன் காட்சிகள் !
03:41விஜய் வந்தால் அதிமுக கூட்டணி பலப்படும்.! டிடிவி சொன்ன ஓபன் ஸ்டேட்மெண்ட்
04:37தேர்தல் முடிவில் ஆன்மீக பூமிக்கு எதிரானவர்களுக்கு பாடம் கிடைக்கும்.! பியூஷ் கோயல் அதிரடி.!
03:01பிரதமரின் திருச்சி வருகை திமுகவை வீட்டுக்கு அனுப்பும் ! மத்திய இணை அமைச்சர் எல் முருகன் பேட்டி