Family Committed Suicide : சின்னமனூரில் பரபரப்பு.. கடன் தொல்லை.. கணவன், மனைவி, மகன் விஷம் குடித்து தற்கொலை!

Family Committed Suicide : சின்னமனூரில் பரபரப்பு.. கடன் தொல்லை.. கணவன், மனைவி, மகன் விஷம் குடித்து தற்கொலை!

Ansgar R |  
Published : Mar 29, 2024, 09:13 PM ISTUpdated : Mar 29, 2024, 09:14 PM IST

Family Commits Suicide : தேனி மாவட்டம் சின்னமனூர், சொக்கநாதபுரம் தண்ணி தொட்டி  அருகே வசித்து வருபவர் செவந்தி வீரன் இவர் பள்ளிகோட்டபட்டியில் உள்ள தனியார் மதுபான பார் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார்.

இவரது மனைவி ஒச்சம்மால், இவர்களுக்கு அனுசியா என்ற மகளும், ராஜேஷ் என்ற மகனும் உள்ளனர். மகன் சின்னமனூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணம் முடிந்து குடும்ப பிரச்சனை காரணமாக அவரது மனைவி பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில்  இன்று காலை வீட்டில் வெகு நேரமாக மின் விளக்குகள் எரிந்து கொண்டிருப்பதால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டின் கதவை தட்டி யாரும் திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது செவத்திவீரன், அவரது மனைவி, மகன் ஆகிய மூவரும் உயிரிழந்து சடலமாக கிடந்துள்ளனர்.

உடனடியாக சம்பவம் குறித்து  சின்னமனூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த காவல்துறையினர் உடல்களை மீட்டு சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத  பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தற்கொலை செய்து கொண்ட குடும்பத்தினருக்கு கடன் பிரச்சினை இருந்து வந்ததாகவும், அதனால் பல நாட்களாக மன உளைச்சல் இருந்து வந்ததாக உறவினர்கள் தரப்பில் கூறப்படுகிறது. 

இச்சம்பவம் குறித்து சின்னமனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து  விசாரித்து வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்து கொண்டது சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

04:24தவெக சார்பில் இப்தார் நோன்பு திறப்பு.. தவெக தலைவர் விஜய் பங்ககேற்று இப்தார் நோன்பு திறந்தார்.
03:57"கடைகோடி மக்களுக்கும் நல்லது செஞ்சிருக்கோம்" செய்ததை எடுத்துச்சொன்ன அமைச்சர் கீதாஜீவன்
02:33அண்ணா அறிவாலயத்தில் ஓ.பி.எஸ்! உற்சாகமாக வரவேற்ற திமுக தொண்டர்கள்.!
03:26விஜய் நிச்சயமாக வாக்குகளை பிரிப்பார்...ஆனால் மீண்டும் ஸ்டாலின் முதலமைச்சர் ஆவார்! புகழேந்தி பேட்டி
02:31ஒரே தொகுதியில் 1033 வேட்பாளர்கள்...அரண்டுபோன தேர்தல் ஆணையம்; தமிழ்நாட்டில் இப்படி ஒரு தொகுதியா?
03:23தவெக விஜய் செய்யம் எதிலும் ஒரு திட்டமிடுதல் இல்லை...பகல் கனவில் இருக்கிறார் ! pt செல்வகுமார் பேட்டி
04:12மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணிக்கு மக்கள் மீண்டும் ஒருமுறை பெரும் வாய்ப்பளிக்க வேண்டும்
03:01கருணாநிதி மீது எம்ஜிஆர் எய்த ஊழல் அம்புகள்..! நட்பு முறிந்த பின் நடந்த அந்த நள்ளிரவு அரசியல் போர்!
03:03மத்தவங்கள பத்தி பேசமாட்டேன், வேல இருக்குப்பா" கைபுள்ளைக்கு அடி பலமா இருக்குமோ...
04:49யாராக இருந்தாலும் பெண்களை இழிவுபடுத்தி பேசுவதை இதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் ! பிரேமலதா எச்சரிக்கை