Thiruvallur : பிரேக் பிடிக்காததால் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து - சாலையோரத்தில் இறங்கி விபத்து! Video!

Thiruvallur : பிரேக் பிடிக்காததால் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து - சாலையோரத்தில் இறங்கி விபத்து! Video!

Ansgar R |  
Published : Jun 14, 2024, 11:57 PM IST

Thiruvallur : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே ரயில்வே கேட்டை கடந்த போது பிரேக் பிடிக்காததால் ஓட்டுனரின் கட்டுப்பட்டை இழந்த அரசுப்பேருந்து சாலையோரம் இறங்கி விபத்து.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் இருந்து காட்டூர் கிராமத்திற்கு அரசு பேருந்து சுமார் 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்டு சென்றது. பொன்னேரி ரயில்வே கேட்டை அந்த பேருந்து கடந்து சென்ற போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அந்த பேருந்து சாலையோரம் கட்டுப்பாட்டை இழந்து சென்றது. 

சாலையோரம் உள்ள சரிவில் அந்த பேருந்து சரிந்து நின்ற நிலையில், அதில் பயணித்த அனைத்து பயணிகளும் அலறியடித்து கிழே இறங்கினர். அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர். பேருந்து ரயில்வே கேட்டை கடந்த போது பேருந்தில் பிரேக் பிடிக்காமல் திடீரென பழுது ஏற்பட்டதால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே இருந்த சரக்கு வாகனத்தில் மோதுவது போல சென்று சாலையோரம் இறங்கியுள்ளது அண்ட் பேருந்து.  

பேருந்தை உடனடியாக நிறுத்தியதால் மேற்கொண்டு பேருந்து கவிழாமல் நின்றது. 40பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து பிரேக் பிடிக்காமல் சாலையோரம் இறங்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

07:27மாணவர்கள் வாழ்க்கையோடு விளையாடாதீர்கள்! - நீட் விவகாரத்தில் நடிகர் ரஞ்சித் ஆவேச பேட்டி!
03:10களத்தில் குதித்த ஜோதிகா..! மக்களுடன் "குஷி ஜோடிகள்" என சந்தோஷப்படும் விஜய் ரசிகர்கள்..! செம்ம இல்ல!
08:21தமிழகத்தின் உரிமைகளை விட்டுத்தர முடியாது ! - மேகதாட்டு விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் அதிரடி
07:04தர்மேந்திர பிரதான் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்!" - நீட் விவகாரத்தில் திருமாவளவன் பேட்டி
03:42எந்த எதிர்ப்பிற்கும் அஞ்ச வேண்டாம்! - சென்னை நீட் போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி கண்டனம்!
07:41பேசுவதற்கு சுதந்திரம் இல்லை.....சென்னையில் நடக்கும் இந்த போராட்டம் போலியானது ! சனம் ஷெட்டி ஆவேசம்
04:16NEET போராட்டத்தில் சர்ச்சை..! சனம் ஷெட்டியை மேடையிலிருந்து வெளியேற வைத்தது என்ன?
04:49தூசியைப் பறக்கவிட்டுச் சீறிப்பாய்ந்த குதிரைகள் ! கமுதியில் அனல் பறந்த பாரம்பரியப் போட்டி !
03:01NEET Protest : விஜய் மௌனம் காப்பது ஏன்? சி.ஜே.பி போராட்டத்தில் கொதித்தெழுந்த பா.ரஞ்சித்!
04:47கல்வி அமைச்சரே உடனடியாக பதவி விலகு! சென்னையில் அனல் பறக்கும் நீட் எதிர்ப்புப் போராட்டம் !