
தவெக தலைவர் விஜய், திமுக ஆட்சியில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்கிற நோக்கத்தில் ஒற்றுமையாக தேர்தலை சந்திக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியதாவது, தேசிய ஜனநாயக கூட்டணி வலுப்பெற்று வருவது திமுக தலைவர் ஸ்டாலினை பதட்டம் அடைய வைத்துள்ளதாகவும், அதனால்தான் மத்திய அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறான கருத்துக்களை பேசி வருவதாகவும் கூறினார்.