Video: டெல்லி குடியரசு தினவிழாவில் தமிழ்நாடு அலங்கார ஊர்தியின் கம்பீர அணிவகுப்பு

Jan 26, 2023, 2:20 PM IST

டெல்லியில் நடைபெற்ற 74வது குடியரசு தின விழாவில் தமிழ்நாட்டின் சார்பில் பங்கேற்ற அலங்கார ஊர்தி, சங்க காலம் முதல் சமூக மாற்றத்துக்கு உதவிய பெண்களின் பங்களிப்பைச் சித்தரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது.

தமிழுக்கு புகழ்சேர்த்த புலவர் ஒளவையார், வீர மங்கை வேலுநாச்சியார் ஆகியோரின் உருவச் சிற்பங்கள் ஊர்தியின் முகப்பில் இடம்பெற்றன. மையப்பகுதியில் கர்னாடக இசை பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமி, பரத நாட்டியக் கலைஞர் பாலசரஸ்வதி, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார், 105 வயதிலும் விவசாயம் செய்துவரும் பாப்பம்மாள் ஆகியோரின் உருவச் சிற்பங்கள் இருந்தன.

ஊர்தியின் பின் பகுதியில் சோழப்பேரரசர் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலின் மாதிரி வடிவம் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. அலங்கார ஊர்தியில் இருந்த இசைக்கலைஞர்கள் கொம்பு, மேளம், நாதஸ்வரம், தவில் போன்ற இசைக்கருவிகளை வாசித்தபடி சென்றனர்.