Watch : முகச்சிதைவு நோய் சிறுமிக்கு மேற்கொண்ட அறுவை சிகிச்சை வெற்றி! முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

Aug 23, 2022, 9:05 PM IST

அரிய வகை முகச்சிதைவு நோயால் அவதிப்பட்டு வந்த சிறுமி டான்யாவிற்கு செவ்வாய் கிழமை காலை 8 மணி அளவில் அறுவை சிகிச்சை தொடங்கப்பட்டது. சுமார் 10 மணிநேரம் நடைபெற்று வந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது

அறுவை சிகிச்சை முடிந்து அவசர சிகிச்சை பிரிவிலிருந்து வெளியே வந்த சிறுமி டான்யாவையும் பெற்றோர்களையும் தமிழக பால்வளத்துறை அமைச்சர் சாமு நாசர் நேரில் சந்தித்து பேசினார்.
அதனைத் தொடர்ந்து சிறுமியின் தாய் சௌபாக்கியாவிடம் தமிழக முதலமைச்சர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி ஆறுதல் கூறினார்

விரைவில் சிறுமி டான்யாவை நேரில் வந்து சந்திப்பதாகவும் மேற்கொண்டு சிறுமி குணமடைய தேவையான அனைத்து மருத்துவ சிகிச்சைகளையும் தமிழக அரசே மேற்கொள்ளும் என்றும் தொலைபேசியில் முதல்வர் உறுதி அளித்தார்

சிறுமியின் தாய் சௌபாக்கியா தன்னுடைய குழந்தை டான்யாவை காப்பாற்றியதற்கு கண்ணீர் மல்க தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றியை தெரிவித்தார்

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பால்வளத்துறை அமைச்சர் நாசர், ஒவ்வொரு நாளும் முதலமைச்சர் ஸ்டாலின் சிறுமி உடல் நிலை குறித்த தகவல்களை கேட்டு அறிந்ததாகவும் சிறுமிக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் உட்பட உதவிகளையும் செய்ய ஆணையிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.