Velmurugan s | Published: Mar 29, 2025, 2:00 PM IST
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் போதையில் தகராறு செய்த இளைஞர்களை விசாரிக்க சென்ற போலீசாரை தாக்கிய வழக்கில் மேலும் இருவரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் போலீசாரை தாக்கும் வீடியோ வெளியானது.ராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் அருகே தனியார் பார் முன் இளைஞர்கள் சிலர் பிரச்னை செய்வதாக புகார் வந்தது. சம்பவ இடத்திற்கு சென்ற தலைமை காவலர்கள் இளைஞர்களை கலைந்து செல்ல கூறியுள்ளனர்.இதில் ஆவேசம் அடைந்த இளைஞர்கள் போலீசாரின் லத்தியை பிடுங்கி அவர்களை கடுமையாக தாக்கினர். தகவலறிந்து வந்த போலீஸார் காயமடைந்த தலைமை காவலர்கள் இருவரையும் மீட்டு, ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்த்தனர்.