பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ரிஷப் பண்ட் பேட்டிங்கில் மீண்டும் சொதப்பினார். ரூ.27 கோடி போச்சா என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கலாய்த்து வருகின்றனர்.
Rishabh Pant's Trolling:ஐபிஎல்லில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்க்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது. பின்பு 172 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 16.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் பிரப்சிம்ரன் சிங் 9 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 34 பந்துகளில் 69 ரன்கள் விளாசி மேட்ச் வின்னராக ஜொலித்தார்.
ரிஷப் பண்ட் 2 ரன்னில் அவுட்
இந்த போட்டியில் லக்னோ அணியின் பேட்டிங் மோசமாக இருந்தது. முதல் பவர்பிளேவில் மூன்று முக்கிய வீரர்கள் ஆட்டமிழந்தனர். மிட்செல் மார்ஷ் டக் அவுட் ஆனார். அடுத்து வந்த மார்க்ரம் சில ஷாட்களை அடித்தாலும் 28 ரன்களில் வெளியேறினார். பின்னர் ரூ.27 கோடி ரூபாய் கொடுத்து வாங்கப்பட்ட கேப்டன் ரிஷப் பண்ட் 2 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.
வச்சு செய்யும் ரசிகர்கள்
தொடர்ந்து 3 போட்டிகளில் சொதப்பியதால் அவரை ட்ரோல் செய்யத் தொடங்கிவிட்டனர். இதுவரை 3 போட்டிகளில் விளையாடியுள்ள ரிஷப் பண்ட் 0, 15 மற்றும் 2 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதனால் சமூக வலைத்தளங்களில் அவரை வைத்து மீம்ஸ்கள் பரவி வருகின்றன. ''ரூ.27 கோடி போச்சா! அவ்வளவு தானா'' என்று பண்ட்டை வைத்து மீம்ஸ்களை தெறிக்க விட்டு வருகின்றனர்.
PBKS vs LSG: ருத்ரதாண்டவமாடிய பிரப்சிம்ரன் சிங்! லக்னோவை பந்தாடிய பஞ்சாப் கிங்ஸ்!
அதிக விலைக்கு ஏலம்போன வீரர்கள் ஜொலித்ததே இல்லை
''ஒரு வீரர் அவுட்டாவது இயல்புதான். ஆனால் ரிஷப் பண்ட் மேக்ஸ்வெலின் சாதாரண பந்தில் கேட்ச் ஆனதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. இன்னைக்கு சஞ்சீவ் கோயங்காவிடம் (லக்னோ அணி உரிமையாளர்) இருந்து தப்பவே முடியாது'' என்று ஒரு சில ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். ''ஐபிஎல்லில் இதுவரை அதிக விலைக்கு ஏலம்போன வீரர்கள் ஜொலித்ததே இல்லை. அவர்களை போல் தான் ரிஷப் பண்ட்டும்'' என்று ஒருசிலரும் கூறி வருகின்றனர்.
கேப்டன்சி, விக்கெட் கீப்பிங்கிலும் சொதப்பல்
ரிஷப் பண்ட் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட வீரர் மற்றும் கேப்டன் ஆவார். அவரை ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 27 கோடி ரூபாய்க்கு வாங்கியது. அவர் அதிரடியாக விளையாடுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், முதல் 3 போட்டிகளிலும் அவர் ஏமாற்றம் அளித்துள்ளார். கேப்டனாக அவர் எடுத்த சில முடிவுகளும் தவறாக இருந்தன. டெல்லிக்கு எதிரான போட்டியில் ஒரு ஸ்டம்பிங்கை தவறவிட்டார். இதனால் அணி தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
ஓசி டிக்கெட் கேட்டு மிரட்டல்! ஹைதராபாத்திலிருந்து வெளியேறும் SRH? களமிறங்கிய ரேவந்த் ரெட்டி!