ஐபிஎல்லில் ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் ருத்ராஜ் கெய்க்வாட் எடுத்த தவறான முடிவால் சிஎஸ்கே அணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.
Ruturaj Gaikwad takes a wrong decision: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் ருத்ராஜ் கெய்க்வாட் தங்கள் அணி முதலில் பவுலிங் செய்யும் என அறிவித்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 196 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் பில் சால்ட் 16 பந்தில் 5 பவுண்டரி, 1 சிக்சருடன் 32 ரன்கள் எடுத்தார்.
சிஎஸ்கேவின் மோசமான பீல்டிங்
கேப்டன் ரஜத் படிதார் 32 பந்தில் 51 ரன்கள் அடித்தார். கடைசி கட்டத்தில் டிம் டேவிட் 8 பந்துகளில் 22 ரன்கள் விளாசினார். இந்த போட்டியில் சிஎஸ்கே வீரர்கள் பீல்டிங்கில் மிகவும் சொதப்பினார்கள். ரஜத் படிதார் கொடுத்த எளிதான இரண்டு கேட்ச் வாய்ப்புகளை தீபக் ஹூடா, கலீல் அகமது ஆகியோர் தவற விட்டனர். இதுவே ஆர்சிபி அதிக ரன்கள் குவிக்க முக்கிய காரணமாகி விட்டது.
சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் ஏமாற்றம்
பின்பு 197 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் ஜோஸ் ஹேசில்வுட், புவனேஷ்வர் குமார் பந்துகளை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வெளியேறினார்கள். சிஎஸ்கே தொடக்க வீரர் ராகுல் திரிபாதி வெறும் 5 ரன்னில் ஹேசில்வுட்டின் பவுன்ஸ் பந்தில் வீழ்ந்தார்.
ருத்ராஜ் கெய்க்வாட் எடுத்த தவறான முடிவு
இதனைத் தொடர்ந்து கேப்டன் ருத்ராஜ் கெய்க்வாட் ரன் ஏதும் எடுக்காமல் ஹேசில்வுட் பந்தில் கேட்ச் ஆனார். பின்பு தீபக் ஹுடாவும் புவனேஷ்வர்குமார் பந்தில் வீழ்ந்தார். இந்த போட்டியில் சிஎஸ்கே கேப்டன் ருத்ராஜ் கெய்வாட் எடுத்த தவறான முடிவு மிகப்பெரும் பின்னடைவாக அமைந்து விட்டது. அதாவது ருத்ராஜ் கெய்வாட் எப்போதும் ஒப்பனிங்கில் தான் களமிறங்கி விளையாடுவார். டெவான் கான்வேவுடன் அல்லது ரச்சின் ரவீந்திராவுடன் அவர் ஒப்பனிங்கில் களமிறங்குவார்.
கைக்கு வந்த கேட்ச்களை விட்ட சிஎஸ்கே வீரர்கள்! ஆர்சிபி அணி இமாலய ரன்கள் குவிப்பு!
ராகுல் திரிபாதி ஒப்பனிங்கில் களமிறங்குவது ஏன்?
ஆனால் இந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே ஒப்பனிங்கில் ருத்ராஜ் கெய்க்வாட்டுக்கு பதிலாக ராகுல் திரிபாதி களமிறங்குகிறார். மும்பை இந்தியன்ஸ்க்கு எதிரான போட்டியில் ராகுல் திரிபாதி சொற்ப ரன்களில் வீழ்ந்தார். ஆர்சிபிக்கு எதிரான இன்றைய போட்டியிலும் ராகுல் திரிபாதி 5 ரன்னில் அவுட் ஆனார். இவர் ஓப்பனிங்கில் களமிறங்கி சீக்கிரம் அவுட்டாகி விடுவதால் அடுத்து களமிறங்கும் ருத்ராஜ்க்கு கடும் நெருக்கடி ஏற்படுகிறது.
விளாசும் சிஎஸ்கே ரசிகர்கள்
இது ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் தெளிவாக தெரிந்தது. ராகுல் திரிபாதியை பொறுத்தவரை ஸ்பின்னர்களை சிறப்பாக விளையாடக்கூடியவர். ஆகவே அவரை நடுவரிசையில் களமிறக்கி விட்டு ருத்ராஜ் ஒப்பனிங் விளையாட வேண்டும். முதல் போட்டியிலேயே ராகுல் திரிபாதி சொதப்பி இருந்த நிலையில், அவரை 2வது போட்டியிலும் ஒப்பனிங்கில் களமிறங்கி ருத்ராஜ் தவறு செய்து விட்டதாக சிஎஸ்கே ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.