IPL 2025 CSK vs RCB: சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள், ஐபிஎல் 2025 தொடரின் எட்டாவது போட்டியில் சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகின்றன. இரு அணிகளும் முதல் போட்டியில் வென்றதால், இந்தப் போட்டி அனல் பறக்கும் போட்டியாக இருக்கும்.
CSK vs RCB IPL 2025 Playing Predictions in Tamil : CSK vs RCB பிளேயிங் 11 கணிப்புகள்: ஐபிஎல் 2025ன் எட்டாவது போட்டி இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே எம்.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த சீசனில் இரு அணிகளும் முதல் முறையாக மோதுகின்றன. இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. ஆர்சிபி அணி 18வது சீசனின் தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை வீழ்த்தியது. அதே நேரத்தில் சிஎஸ்கே அணி மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது. இதனால் இரு அணிகளின் மன உறுதியும் அதிகமாக உள்ளது. மீண்டும் ஒரு பெரிய போட்டிக்கு களம் தயாராகிவிட்டது. பெங்களூரு மற்றும் சென்னை அணிகளில் சிறந்த வீரர்கள் உள்ளனர். சேப்பாக்கம் மைதானத்தின் பிட்ச் ரிப்போர்ட், ஹெட் டு ஹெட் புள்ளிவிவரங்கள் மற்றும் சாத்தியமான பிளேயிங் 11 பற்றி பார்க்கலாம்.
சென்னை மைதானத்தில் பொதுவாக பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். இதனால் இங்கு பெரிய ஸ்கோரை பார்ப்பது கடினம். ஆரம்பத்தில் சில பந்துகளில் வேகமாக ரன்கள் வரும். ஆனால் பந்து பழையதாகும்போது, சுழற்பந்து வீச்சாளர்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். முதலில் பேட்டிங் செய்யும் அணிகள் 58 சதவீத போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. அதே நேரத்தில் இரண்டாவது இன்னிங்ஸில் சேஸ் செய்யும் அணி 41 சதவீத போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 10 போட்டிகளில் சுழற்பந்து வீச்சாளர்கள் 53 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். வேகப்பந்து வீச்சாளர்கள் 58 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர். இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச விரும்பலாம். இங்கு முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 164 ஆக உள்ளது. இரண்டாவது இன்னிங்ஸில் இது 150 ஆக குறைகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடந்த கடந்த 10 போட்டிகளை பார்த்தால், சிஎஸ்கே அணி 6 போட்டிகளில் வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தியுள்ளது. ஆர்சிபி அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக மே 18, 2024 அன்று இரு அணிகளும் மோதின. இதில் ஆர்சிபி அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தியது. இரு அணிகளும் மோதும் போது, ரசிகர்கள் ஒரு பெரிய ஸ்கோரை எதிர்பார்க்கலாம். இந்த ஐபிஎல் 2025 புள்ளிப்பட்டியலில் சென்னை அணி ஒரு போட்டியில் ஒரு வெற்றியுடன் 2 (+0.493) புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது. அதே நேரத்தில் பெங்களூரு (+2.137) ஒரு போட்டியில் ஒரு வெற்றியுடன் 2 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சாத்தியமான பிளேயிங் 11:
ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), சிவம் துபே, சாம் கரன், தீபக் ஹூடா, எம்எஸ் தோனி (விக்கெட் கீப்பர்), நூர் அகமது, கலீல் அகமது, ரவீந்திர ஜடேஜா, ஆர் அஸ்வின், நாதன் எல்லிஸ்.
சப் இம்பாக்ட் பிளேயர்: ராகுல் திரிபாதி, ஷேக் ரஷீத், விஜய் சங்கர், மதீஷா பதிரனா, அன்ஷுல் கம்போஜ்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் சாத்தியமான பிளேயிங் 11:
பில் சால்ட் (விக்கெட் கீப்பர்), விராட் கோலி, ரஜத் படிதார் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா, டீம் டேவிட், க்ருனால் பாண்டியா, ரசிக் சலாம், ஜோஷ் ஹேசில்வுட், யாஷ் தயாள், சுயாஷ் சர்மா.
இம்பாக்ட் பிளேயர்: தேவ்தத் படிக்கல், புவனேஷ்வர் குமார், ஜேக்கப் பெத்தல், ரோமியோ ஷெப்பர்ட், ஸ்வப்னில் சிங்.