
MS Dhoni dismisses phil Salt with lightning-fast stumping: ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இந்தியாவில் கோலாகலமாக நடந்து வருகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் ருத்ராஜ் கெய்க்வாட் தங்கள் அணி முதலில் பவுலிங் செய்யும் என அறிவித்தார். அதன்படி ஆர்சிபி அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
பில் சால்ட் அதிரடி ஆட்டம்
தொடக்க ஆட்டக்காரர்களாக பில் சாலட், விராட் கோலி களமிறங்கினார்கள். பில் சால்ட் தொடக்கம் முதலே சிக்சரும், பவுண்டரியுமாக விளாசினார். அஸ்வினின் ஒரே ஓவரில் 2 பவுண்டரி, 1 சிக்சர் விளாசிய பில் சால்ட் , கலீல் அகமது பந்தையும் விளாசினார். ஸ்கோர் 4 ஓவர்களில் 37 ரன்களாக உயர்ந்த நிலையில், 5வது ஓவரை நூர் அகமது வீச வந்தார்.
ipl
தோனியின் மின்னல் வேக ஸ்டெம்பிங்
இந்த ஓவரின் கடைசி பந்தில் பில் சால்ட் அடிக்க முயன்றபோது பந்தை மிஸ் செய்தார். இதனால் பந்து விக்கெட் கீப்பர் தோனியின் கைக்கு சென்றபோது அவர் மின்னல் வேகத்தில் ஸ்டெம்பிங் செய்தார். ரீப்ளையில் பார்த்தபோது பில் சால்ட் காலை கிரீஸை விட்டு தூக்கியது தெரியவந்தது. இதனால் அம்பயர் சால்ட் அவுட் என அறிவித்தார். பில் சால்ட் லைட்டாக காலை வெளியே எடுத்தபோது தோனி மின்னல் வேகத்தில் செயல்பட்டு ஸ்டெம்பிங் செய்துள்ளார. அதிரடியாக விளையாடிய பில் சால்ட் 16 பந்தில் 5 பவுண்டரி, 1 சிக்சருடன் 32 ரன்கள் எடுத்தார்.
IPL: ரசிகருக்கு பணம் கொடுத்து காலில் விழ வைத்தாரா ரியான் பராக்? புதிய சர்ச்சை!
பிரம்மித்து போன வீரர்கள்
தோனியின் அதிவேகமாக ஸ்டெம்பிங் செய்ததால் மட்டுமே இந்த விக்கெட்டை வீழ்த்த முடிந்தது. இந்த ஐபிஎல் தொடரில் தோனி மின்னல் வேகத்தில் ஸ்டெம்பிங் செய்வது இது 2வது முறையாகும். மும்பை இந்தியன்ஸ்க்கு எதிரான ஆட்டத்திலும் தோனி இதேபோல் மின்னல் வேகத்தில் ஸ்டெம்பிங் செய்து சூர்யகுமார் யாதவ்வை அவுட் ஆக்கினார். தோனி விரைவாக செயல்பட்டு பில் சால்ட்டை அவுட் செய்தபோது அவரது வேகத்தை பார்த்து ஆர்சிபி வீரர்கள் மட்டுமின்றி சிஎஸ்கே வீரர்களும் பிரம்மித்து போனார்கள்.
அழகிய லைலா! இணையத்தில் வைரலாகும் காவ்யா மாறன்: ஏன் தெரியுமா? IPL & Ghibli Art
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.