ஐபிஎல்: 14வது பிறந்தநாள் கொண்டாடிய ராஜஸ்தான் வீரர்! ரசிகர்கள் வாழ்த்து மழை!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி 14வது பிறந்தநாள் கொண்டாடினார். அவருக்கு சக வீரர்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர். 

IPL: Rajasthan Royals player Vaibhav Suryavanshi celebrated his 14th birthday ray

IPL: Vaibhav Suryavanshi celebrated his 14th birthday: இந்தியன் பிரீமியர் லீக் (IPL 2025) தொடரில் 13 வயதான வைபவ் சூர்யவன்ஷி (vaibhav suryavanshi) ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் 1.1 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டபோது ஒரு தனித்துவமான சாதனை நிகழ்ந்தது. ஐபிஎல் வரலாற்றில் மிக இளம் வீரர் என்ற சாதனையை படைத்தார். ஆனால் ராஜஸ்தான் ராயல்ஸ் தொடர்ந்து இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. இந்த இரண்டிலும் வைபவ் சூர்யவன்ஷி களமிறங்கவில்லை.

இந்நிலையில், வைபவ் சூர்யவன்ஷி இன்று தனது 14வது பிறந்தநாளை கொண்டாடினார். ராஜஸ்தான் அணியின் சக வீரர்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்தனர். மேலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வைபவ் சூர்யவன்ஷிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர். 
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் தனது சமூக ஊடக தளங்களில் வைபவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தது. 

Latest Videos

கனவில் தொடங்கிய ஒரு பயணம்

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ''கனவில் தொடங்கிய ஒரு பயணம். இப்போது அதை மெதுவாகவும், நிலையான வேகத்திலும் முன்னேறுவதை நாங்கள் பார்த்து வருகிறோம். பிறந்தநாள் வாழ்த்துக்கள் வைபவ்" என்று எழுதியுள்ளது. பல்வேறு வைபவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து, அவரை விளையாடும் லெவன் அணியில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஐபிஎல் லைவ் ஸ்கோர், அப்டேட்களுக்கு ஏசியாநெட் தமிழுடன் இணைந்திருங்கள்

 

யார் இந்த வைபவ் சூர்யவன்ஷி

வைபவ் சூர்யவன்ஷி சிறு வயதிலேயே கிரிக்கெட் உலகில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியுள்ளார். அவர் இந்திய U-19 அணிக்காக விளையாடிய ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 58 பந்துகளில் சதம் அடித்தார். U-19 ஆசிய கோப்பையிலும் அவரது ஆட்டம் சிறப்பாக இருந்தது. அவர் திறமையான இளம் வீரர் மற்றும் ஐபிஎல் போட்டியில் வெற்றி பெறும் திறன் படைத்தவர். அவர் விரைவில் களத்தில் விளையாடுவதை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

ராஜஸ்தான் அணியின் மோசமான பயணம் 

இந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பெற்றாலும் ராஜஸ்தான் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வைபவ் சூர்யவன்ஷி பிளேயிங் லெவனில் சேர்க்கப்படவில்லை. நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணி விளையாடிய 2 ஆட்டத்திலும் தோல்வியை தழுவியுள்ளது. சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. நேற்று கொல்கத்தா நைட் ரைடர்சுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது.

வைபவ் சூர்யவன்ஷியை அணியில் சேர்க்க வேண்டும் 

இப்போது ராஜஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் பிடித்து மோசமான நிலையில் உள்ளது. அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் 3 போட்டிகளில் கேப்டன் செய்ய மாட்டார். மேலும் அனுவமிக்க, தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வெளிநாட்டு வீரர்கள் இல்லாததால் ராஜஸ்தான் மிகவும் பலவீனமாக உள்ளது. ஆகவே வைபவ் சூர்யவன்ஷியை ஒப்பனிங்கில் களமிறக்கி அதிரடி தொடக்கம் காண வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
 

vuukle one pixel image
click me!