புது பணக்காரனின் புத்தி இப்படித்தான் இருக்கும்; இர்பானை கிழித்து தொங்க விட்ட விஜே பார்வதி!

Published : Apr 01, 2025, 10:35 PM ISTUpdated : Apr 01, 2025, 11:08 PM IST

சர்ச்சைக்கு பெயர் போன யூடியூப் பிரபலம் இர்பான், இப்போது ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு உதவி செய்கிறேன் என்ற பெயரில் ஏழை மக்களை இழிவுபடுத்தும் விதமாக நடந்து கொண்டதாக விஜே பார்வதி விமர்சனம் செய்துள்ளார்.  

PREV
16
புது பணக்காரனின் புத்தி இப்படித்தான் இருக்கும்; இர்பானை கிழித்து தொங்க விட்ட விஜே பார்வதி!

சர்ச்சைக்கு பெயர் போன யூடியூப் பிரபலம் தான் இர்பான்.  விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அதிகளவில் பிரபலமானார். பல்வேறு ஹோட்டல்களுக்கு சென்று அங்கு செய்யப்படும் சாப்பாட்டை சுவைத்து இவர் கொடுக்கும் விமர்சனமும் மிகவும் பிரபலம். யூ டியூப் மூலம் தற்போது மாதம் தோறும் லட்ச கணக்கில் காசு பார்த்து வரும் இர்ஃபான் உதவி செய்கிறேன் என்கிற பெயரில் செய்துள்ள சம்பவம் தான் தற்போது சர்ச்சையில் இவரை சிக்கவைத்துள்ளது.
 

26
ரம்ஜான் பண்டிகை

அண்மையில் ரம்ஜான் பண்டிகை கொண்டாட பட்ட நிலையில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இர்பான் ஏழைகளுக்கு உதவி செய்யும் நோக்கத்தில், உடைகள் மற்றும் சில நிவாரண பொருட்களை தனது காரில் இருந்தபடியே கொடுத்துள்ளார்.

36
இர்பான் கோபத்துடன் சத்தம் போடுவதை பார்க்க முடிகிறது:

இந்த வீடியோவை இர்பான் தனது யூடியூப் தளத்திலும் பதிவேற்றம் செய்துள்ளார். அந்த வீடியோவில் சிலர் தங்களுக்கு உதவி பொருட்கள் கிடைக்காதோ என்ற பதற்றத்தில், காருக்குள் கை விட்டு பிடுங்குவதையும், அப்போது இர்பான் கோபத்துடன் சத்தம் போடுவதையும் பார்க்க முடிகிறது. அதோடு இர்பானின் மனைவி கையை தொட்டதற்கு அவர் கோபமாக திட்டுவது போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் இடம் பெற்றிருக்கிறது.

46
விஜே பார்வதி

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி கடுமையான விமர்சனத்திற்கு ஆளாகி வரும் நிலையில், விஜே பார்வதியும் தன்னுடைய பங்கிற்கு இர்பானை கிழித்து தொங்கவிட்டுள்ளார்.

56
"இர்பான் பெரிய ஜமீன் பரம்பரை"

இந்த வீடியோ குறித்து விஜே பார்வதி கூறியிருப்பதாவது: "இர்பான் பெரிய ஜமீன் பரம்பரை. காரை விட்டு இறங்காமல் அதுவும் காருக்குள் உட்கார்ந்து கொண்டு தான் ஏழை மக்களுக்கு உதவி செய்வார். மனைவியை காப்பாற்ற நினைப்பவர் பத்திரமாக வீட்டிலேயே விட்டு விட்டு வந்துருக்க வேண்டியது தானே? ரத்தன் டாடா தான் சம்பாதித்த பணத்தை ஏழை மக்களுக்கு கொடுத்து உதவி செய்திருக்கிறார். ஆனால் அவர் எப்போதுமே தான் செய்த உதவிகளை வெளியே சொன்னது இல்லை.

66
விளாசிய விஜே பார்வதி :

ஆனால், இது போன்ற தருணங்களில் தான், இந்த புது பணக்காரர்களின் புத்தி வெளிப்படுகிறது. தன்னிடம் காசு, பணம் இருப்பதை இப்படி வெளிக்காட்டி கொள்கிறார்கள். இவர்களை எல்லாம் நாம் இன்னமும் புரோமோட் செய்கிறோம் என்று தனது காட்டமான விமர்சனத்தை முன் வைத்துள்ளார். இர்பானின் இந்த வீடியோவிற்கு பலரும் தங்களது கருத்துகளை முன் வைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories