Monalisa: சினிமா வாய்ப்பு பறிபோனதால் சீரியலில் நடிக்கிறாரா மோனாலிசா?

மகா கும்பமேளாவில் வைரலான மாலை விற்கும் பெண் மோனலிசா , பாலிவுட் சினிமாவில் நடிக்க கமிட் ஆன நிலையில் இயக்குனர் சனோஜ் மிஸ்ரா கைது செய்யப்பட்டுள்ளதால், மொனாலிசாவின் திரையுலக கனவு கேள்விக்குறியாகி உள்ளது. எனவே இவரின் அடுத்த முயற்சி குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
 

மகா கும்பமேளாவில் மாலை விற்று பிரபலமான காந்த கண் அழகி தான் மொனாலிசா போஸ்லே. இவரின் வீடியோ மற்றும், புகைப்படங்களை பார்த்து... பாலிவுட் இயக்குனர் சனோஜ் மிஸ்ரா 'டைரி ஆஃப் மணிப்பூர்' திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை கொடுத்தார்.

சனோஜ் மிஸ்ரா ஜாமீனை ரத்து செய்த நீதிமன்றம்:

ஆனால் தற்போது மோனாலிசாவுக்கு பட வாய்ப்பை வழங்கிய சனோஜ் மிஸ்ரா, ஒரு பெண்ணுக்கு பட வாய்ப்பு கொடுப்பதாக ஆசை காட்டி, அவருடன் பலமுறை தனிமையில் இருந்து விட்டு, தன்னை ஏமாற்றி விட்டதாக கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். முன் ஜாமீன் கேட்டு சனோஜ் மிஸ்ரா நீதிமன்றத்தை நாடிய போதிலும், நீதிமன்றம் இவரது ஜாமீனை ரத்து செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மஹா கும்ப மேளா காந்த கண்ணழகி மோனாலிசாவுக்கு சினிமா வாய்ப்பளித்த இயக்குனர் பாலியல் வழக்கில் கைது!
 


இயக்குனர் கைது:

சினிமா வாய்ப்புக்காக சொந்த ஊரில் இருந்து, மும்பை வந்து தன்னுடைய முதல் படத்திலும் மோனலிசா நடிக்க துவங்கிய நிலையில், இயக்குனர் கைது செய்யப்பட்டுள்ளதால் இவரின் திரையுலக வாழ்க்கை கேள்வி குறியாக மாறியுள்ளது. 
 

மொனாலிசாவுக்கு ஒரு நாள் கூட ஓய்வில்லை:

ஆனால் மொனாலிசா, திரைப்படம் வெளியாகாவிட்டாலும் அவர் ஏற்கனவே ஒரு நட்சத்திர அந்தஸ்தை பெற்றுவிட்டார். சினிமாவுக்காக பயிற்சி பெற்று வரும் மொனாலிசாவுக்கு ஒரு நாள் கூட ஓய்வில்லை. ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு நகரம், ஊரில் நிகழ்ச்சி இருக்கிறது. கடை திறப்பு விழா, ஊர் திருவிழாவின் விருந்தினர் என பல நிகழ்ச்சிகளில் மொனாலிசா விருந்தினராக கலந்து கொள்கிறார். தற்போது அடுத்த 3 முதல் 4 மாதங்களுக்கு தொடர்ச்சியாக நிகழ்ச்சிகள் புக் ஆகியுள்ளன என்று கூறப்படுகிறது. ஏற்கனவே கேரளாவில் நகைக்கடை திறப்பு விழாவில் மொனாலிசா கலந்து கொண்டார். நேபாளத்தில் நடந்த சிவராத்திரி நிகழ்ச்சியிலும் மொனாலிசா விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் மொனாலிசா விருந்தினராக கலந்து கொள்கிறார்.

போட்டோவுக்காக இப்படியா செய்வாங்க! கும்பமேளா வைரல் பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்!
 

சீரியலில் மொனாலிசா?

சனோஜ் மிஸ்ரா கைது செய்யப்பட்டதால் 'டைரி ஆஃப் மணிப்பூர் ' திரைப்படம் உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மொனாலிசாவுக்கு வேறு சினிமாவில் வாய்ப்பு கிடைக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. ஏனென்றால் மொனாலிசா இப்போது தான் நடிக்க கற்று வருகிறார். இதனால் உடனடியாக வாய்ப்பு கிடைக்க வாய்ப்பில்லை. ஆனால் தகவல்களின்படி மொனாலிசா சீரியலில் நடிக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. கெஸ்ட் ரோலில் முக்கிய சீரியலில் மொனாலிசா நடிக்கவுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

சீரியலில் நடிக்க உள்ளார்:

தற்போது மொனாலிசா பல நிகழ்ச்சிகளில் விருந்தினராக கலந்து கொண்டு வருகிறார். இதன் நடுவே சீரியலில் நடிக்க வாய்ப்புள்ளது. இதன் மூலம் தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சனோஜ் மிஸ்ரா விடுதலை ஆன பின்னர் மீண்டும் அவர் 'டைரி ஆஃப் மணிப்பூர்'  படத்தில் நடிக்க துவங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல் தான் தற்போது பாலிவுட்டில் வைரலாகி வருகிறது.

Latest Videos

click me!