
திமுக எம்எல்ஏ வில்வநாதன் ஆகியோரிடம் அரசு மதுபான கடை அமைப்பதை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்து மனு அளித்த போது மதுபான கடை வராது என உறுதி அளித்ததாகவும் தற்போது அப்பகுதி மக்களுக்கு தெரியாமல் வெளியில் ஜூஸ் கடை என பெயர் பலகை வைத்துவிட்டு உள்ளே அரசு மதுபான கடை இயங்கி வந்தது தெரிய வந்ததையடுத்து புதிதாக திறக்கப்பட்ட அரசு மதுபான கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கடையை முற்றுகையிட்டு ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்