மாநகராட்சி பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி.. வெளியான வீடியோவால் பரபரப்பு.. வழக்கு பதிந்து போலீசார் விசாரணை..

மாநகராட்சி பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி.. வெளியான வீடியோவால் பரபரப்பு.. வழக்கு பதிந்து போலீசார் விசாரணை..

Published : Oct 09, 2022, 03:16 PM IST

கோவை மாநகராட்சி ஆரம்பப்பள்ளி  வளாகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் பயிற்சி நடத்தியது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

கோவை மாநகராட்சி பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பயிற்சி நடப்பது தொடர்பான புகைபடம் மற்றும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதுக்குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் மாநகராட்சி பள்ளி வளாகங்களில் எந்த நிகழ்ச்சிகளும் நடத்துவதற்கு அனுமதி கொடுக்கப்படவில்லை எனவும் தனியார் அமைப்பினர் பயிற்சி நடைபெறுவது குறித்து உரிய விசாரணை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கோவை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க:அண்ணா... அப்பா இடத்தில் உங்களை வைத்து பார்க்கிறேன்.! உங்கள் பின்னால் அணிவகுத்து நிற்பேன்- கண்கலங்கிய கனிமொழி

அதுமட்டுமின்றி மாநகராட்சி பள்ளி வளாகத்திறகுள் அத்துமீறி உள்ளே நுழைந்ததாக வழக்கு பதிய உத்தரவிடப்பட்டுள்ளது. இதுக்குறித்து பள்ளி தலைமை ஆசிரியருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாநகராட்சி பள்ளி வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் பயிற்சி அளித்ததாக  வந்த புகாரின் அடிப்படையில் மாநகராட்சி கல்வி அலுவலர் உரிய விசாரணை செய்து வருகிறார்.இதனிடையே மாநகராட்சி பள்ளி நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடத்தவுள்ளதாக தந்தை பெரியார் திராவிடர் கழகம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க:சில அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகளின் நடவடிக்கைகள் தனக்கு தூக்கமற்ற இரவுகளை தருகிறது- மு.க.ஸ்டாலின் வேதனை

07:34மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த எல்.முருகனுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
08:10முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளைத் தொடங்கி வைத்த அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் !
05:22தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறி: மதுரையில் பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேட்டி
03:33மாவட்ட விளையாட்டு அரங்கில் நவீன உடற்பயிற்சி கூடம் திறப்பு : விளையாட்டு வீரர்களுடன் ஆதவ் அர்ஜுனா !
08:35ஒரே தேசம் ஒரே ஆட்சி மாநில அரசுகளே கூடாது என்பதுதான் அவர்களின் திட்டம் ! திருமாவளவன் அதிரடி
03:16தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யை பார்க்கணும் ! - கேரளாவில் நவராத்திரி விழாவுக்கு வரும் மக்கள் கருத்து !
06:10மாற்றுத்திறனாளிகள் தின விழா : காட்பாடியில் நலத்திட்ட உதவிகள் மற்றும் பரிசுகளை வழங்கிய விஜய் பாலாஜி!
08:19அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு குறித்து சென்னையில் அமைச்சர் வெங்கடரமணன் விளக்கம் !
04:02மாகரல், ஆர்பாக்கம் கிராமங்களில் தொடர் மழை: காஞ்சிபுரத்தில் குளிர்ந்த வானிலை !
03:39திருவண்ணாமலையில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு: ஒரே நாளில் 1.5 லட்சம் பனை விதைகள் நடும் இயக்கம் !