தமிழக நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார். அவர் நிதிநிலை அறிக்கையை வாசித்துக் கொண்டிருக்கும் போது, டாஸ்மாக் நிறுவனத்தில் பல ஆயிரம் கோடி ஊழல் நடந்திருப்பதாக பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதுடன் வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நயினார் நாகேந்திரன் இந்திய ரூபாய் சின்னத்தில் மற்றம் கொண்டுவருவது அரசியல் சாசனத்திற்கு எதிரான செயல் ஆகும். எதிர்க்க வேண்டும் என்றால் முதலிலேயே எதிர்த்திருக்க வேண்டும் எனறு கூறினார்.