இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி. அப்போது பேசிய அவர், 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் நியாயவிலை கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும். இரும்பு சத்து, போலிக் அமிலம் உள்ளிட்ட ஊட்டச்சத்து அடங்கியது இந்த செறிவூட்டப்பட்ட அரிசி என்று கூறிய அவர் 100 கிலோ அரசியில் 1 கிலோ செறிவூட்டப்பட்ட அரிசி சேர்க்கப்படும். கடந்த காலத்தை விட 3 முதல் 4 மடங்கு அதிகமாக அரிசி கடத்தலை தடுத்துள்ளோம். தமிழகத்தில் இருந்து வெளி மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்தல் பெருமளவில் தடுக்கப்பட்டுள்ளது. கடந்த 18 மாதமாக கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை முழுவதுமாக அரைத்து பெரும் சாதனை படைத்துள்ளனர். செறிவூட்டப்பட்ட அரிசியை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது என்று கூறினார். இதையும் படிங்க..அப்போ இருந்த இலங்கை போராட்ட களமா இது.? அனைவரையும் ஆச்சரியப்படுத்திய வைரல் புகைப்படம் !! இதையும் படிங்க..செலவே இல்லாமல் சுற்றுலா செல்ல வேண்டுமா.? நீங்க வந்தா மட்டும் போதும்! - இந்த நாடு பற்றி தெரியுமா உங்களுக்கு?