Vijay: 15 ஆண்டுகளாக உழைத்தவர்களுக்கு மரியாதை இல்லை; தமிழக வெற்றி கழகத்தில் வெடித்த சர்ச்சை

Vijay: 15 ஆண்டுகளாக உழைத்தவர்களுக்கு மரியாதை இல்லை; தமிழக வெற்றி கழகத்தில் வெடித்த சர்ச்சை

Published : Mar 12, 2024, 06:29 PM IST

விஜய் மக்கள் இயக்கத்தில் பாடுபட்டவர்களுக்கு தமிழக வெற்றி கழகத்தில் இடமில்லை என வேதனையுடன் கூறும் குமாரபாளையம் நகர விஜய் மக்கள் இயக்க மகளிர் அணி நிர்வாகி குற்றங்களை ஆரம்பத்திலேயே களைய வேண்டும் என கோரிக்கை.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகர விஜய் மக்கள் இயக்கத்தின் மகளிர் அணி தலைவராக பொறுப்பு வகிப்பவர் பிரேமலதா. இவர் நடிகரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய்க்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். இந்த கோரிக்கையில் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் பலரும், பல்வேறு நலத்திட்டங்களை செய்து வரும் சூழ்நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தைச் சார்ந்த சிலர்கள் அதனை தடுத்து வந்தனர். 

இந்நிலையில் மாவட்டம் மற்றும் நகர நிர்வாகிகள் செய்யும் தவறுகளால் தமிழகம் முழுவதும் உள்ள தொண்டர்கள் பெரும் பாதிப்பை அடைந்துள்ளனர். கடந்த 10, 15 ஆண்டுகளுக்கும் மேலாக விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்தவர்களுக்கு தமிழக வெற்றிக்கழகம் தொடங்கியதும் அவற்றில் பதவிகள் வழங்காமல், மாவட்டம் மற்றும் நகர நிர்வாகிகள் தங்கள் உறவினர்களுக்கும் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்குமே பரிந்துரை செய்து பதவிகளைப் பெற்றுத் தருகின்றனர். 

இதனால் உண்மையாக உழைத்தவர்களுக்கு எவ்வித பயனும் கிடைக்கவில்லை. இது மற்ற கட்சிகளைப் போலவே தமிழக வெற்றிக் கழகத்திலும் நடந்து விடும் அவல சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனை ஆரம்பத்திலேயே கவனத்தில் கொண்டு களைய வேண்டும் என தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய்க்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

11:35சென்னையில் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் தொடக்கம் : அமைச்சர் ராஜ்மோகன் தொடங்கி வைத்தார்!
09:01தேர்தல் செலவு தொடர்பான புகார்கள் மற்றும் விமர்சனங்கள்: அமைச்சர் ராஜ்மோகன் பதில் !
04:26வதானேஸ்வரர் கோவிலில் புதிய வெள்ளி ரிஷப வாகன வெள்ளோட்டம் - தர்மபுர ஆதீனம் தொடங்கி வைத்தார் !
05:45மின்சார தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை: அவசர கால டெண்டர் குறித்து அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி!
03:55சென்னை மழைக்கால முன்னெச்சரிக்கை பணிகள்: ஆதவ் அர்ஜுனா வில்லிவாக்கத்தில் மழைநீர் வடிகால் ஆய்வு !
03:04சென்னையில் இலங்கை தூதரக முற்றுகைப் போராட்டம்: வேல்முருகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கைது!
08:11சென்னையில் தமிழக வாழ்வுரிமை கட்சி போராட்டம்: இலங்கை துணை தூதரகம் முற்றுகை!
03:12தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர் பானுமதி தனது வாக்கைப் பதிவு செய்தார்!
05:43வெற்றி வாய்ப்பை தூக்கி எறிந்துவிட்டு மீண்டும் வாக்கு கேட்பது சரியல்ல : பாஜக தலைவர் தமிழிசை பேச்சு!
03:28தாராபுரம் இடைத்தேர்தல்: மடுக்கம்பாளையம் வாக்குச்சாவடியில் தவெக வேட்பாளர் சத்யபாமா வாக்களித்தார்!
Read more