Velmurugan s | Published: Mar 27, 2025, 7:00 PM IST
கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னை பெங்களூர் ஐதராபாத் டெல்லி கொச்சின் மும்பை என உள்நாட்டுக்கு 30 விமானங்களும் வெளிநாடுகளுக்கு மூன்று விமானங்களும் இயக்கப்படுகிறது. அதன்படி கோவை விமான நிலையத்தில் நாள் ஒன்றுக்கு சராசரியாக பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில் நேற்று இரவு 7.20 மணிக்கு சென்னையில் இருந்து கோவைக்கு வந்த விமானத்தில் பயணிகள் வந்து வெளியே சென்ற பிறகு சிறிது நேரம் கழித்து ஒரு ஆணும், பெண்ணும் விமான நிலையத்திலிருந்து பயணிகள் வெளியேறும் வழியில் வந்து கொண்டு இருந்தனர்.கோவை விமான நிலையத்தில் வைத்து என்னை திருமணம் செய்து விட்டு அவளுடன் ஹனிமூன் போயிட்டு வருகிறாயாடா பொம்பள பொறுக்கி என கணவனை தகாத வார்த்தைகளால் திட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.