vuukle one pixel image

TASMAC SCAM|BJP Protest|H RAJA Arrest|நாய் வண்டியில் ஏற மாட்டேன்- போலீசாரிடம் எச்.ராஜா வாக்குவாதம்!

Velmurugan s  | Published: Mar 17, 2025, 8:00 PM IST

டாஸ்மாக் ஊழல் தொடர்பாக திமுக அரசை கண்டித்து சென்னை எழும்பூரில் தமிழக பாஜக போராட்டம் நடந்த திட்டமிட்டது.ஆனால், உரிய அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கைது செய்யப்பட்டார். காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி வண்டியில் ஏற்றினர்.அப்போது அவர், "நான் என்ன குற்றவாளியா? குற்றவாளி ஏறும் வண்டியில் நான் ஏறமாட்டேன். செந்தில் பாலாஜி என்ற குற்றவாளியை சிறையில் வைத்து, அவர் மீண்டும் இன்று வந்து குற்றம் செய்கிறார். அவரை கைது செய்ய உங்களுக்கு முதுகெலும்பு உண்டா?நாய் ஏற்றும் வண்டியில் நாங்கள் ஏறமாட்டோம். நாய் ஏற்றும் வண்டியை ஏன் எடுத்து வந்தீர்கள்? எங்களை நீங்கள் கைது செய்யலாம். நாங்கள் வீடு வீடாக செல்வதை யாராலும் தடுக்க முடியாது" என ஆவேசமாக வாக்குவாதம் செய்தார்.