Velmurugan s | Published: Mar 15, 2025, 6:00 PM IST
திமுக தேர்தல் வாக்குறுதியாக தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம், காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருந்தனர். ஆனால், ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளாகியும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அரசு ஊழியர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தமிழக பட்ஜெட்டை எதிர்பார்த்த அறிவிப்புகள் இல்லாததால் வரும் 23ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என மிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அதிரடியாக அறிவித்து முதல்வர் ஸ்டாலினை அதிர்ச்சியடைய செய்துள்ளது.