Velmurugan s | Published: Mar 26, 2025, 1:00 PM IST
G K Vasan meets Minister Amit Shah : ஜி.கே.வாசனின் எம்பி பதவி காலம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நிறைவடையவுள்ளது. எனவே தற்போதே ராஜ்யசபா எம்பி பதவியை மீண்டும் பெற ஜி.கே.வாசன் காய் நகர்த்தி வருகிறார். அந்த வகையில் இன்று பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின் போது ராஜ்யசபா சீட் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. மற்றொரு தரப்பில் தமாகவை பாஜகவில் இணைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இது தொடர்பாக எந்தவித தகவலையும் உறுதிப்படுத்தாக ஜி.கே.வாசன் மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றே தனது எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.